பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சங்கர ராசேந்திர சோழன் உலா பட்டத்து யானை 66. ஆதோ ரணர்கொணர ஆர்க்கும் மணிக்கரிணி மீதோய் முகடுதொடும் வெங்கைமா-ஒதம்போய் 67. அப்புறத்தும் இப்புறத்தும் ஆமா றிறைத்திறைத்துக் குப்புறப் பேராழிக் குன்றத்தே-துப்பும் 68. மகர திமிங்கிலகு லாதி வருக்கம் . குகர விடைமடுக்கும் கூற்றம்-புகர்முகக்கை 69. நீட்டும் தொறும்அணங்கன் நின்றுறங்காக் கண்ளுேடு பூட்டும் சிலைகரக்கும் போர்உவா-நீட்டியகை 66-85. சோழனுடைய பட்டத்து யானையின் வருணன. 66. ஆதோரணர் - யானைப்பாகர். ஆர்க்கும் மணி கரிணி - ஒலிக்கின்ற மணிகளையுடைய பெண் யானை. மீ தோய் முகடுதொடும் வெம் கை மா - மேலே தோய்ந்த வானத்தின் உச்சியைத் தொடுகின்ற வெவ்விய துதிக்கையையுடைய விலங்கு. . 66-8. யானை கடலில் உள்ள நீர்ை இறைத்து இறைத்துச் சக்கர வாளகிரியில் துப்பி, அக்கடல் நீரில் உள்ள மகர மீன் முதலியவை அந்தக் கிரியில் உள்ள குகைகளினிடையே புகும்படி செய்கின்றது. ஒதம் - கடல் அலே; இங்கே நீர். குப்புற - குதிக்க. பேராழிக் குன்றம் - பெரிய சக்கரவாளகிரி. மகரதிமிங்கில குலாதி வருக்கம் - மகர மீன் வகைகள், திமிங்கிலத்தின் வகைகள் முதலிய நீர் வாழ் இனங்கள். குகரம் இடை - குகைகளின் இடையே. மடுக்கும். புகுத்தும். நீர் நிலையை விட்டு மகர மீன் முதலியவை குகைகளிற் புகுந்து இறந்துபடச் செய்தமையால் கூற்றம் என்று உருவகம் செய் தார். புகர்முகக் கை - புள்ளிகளையுடைய முகத்தினின்று தொங்கும் துதிக்கை. 69. யானே கை நீட்டும்பொழுதெல்லாம் அது பறித்து உண்டு விடுமோ என்ற அச்சத்தால் மன்மதன் தன் கையிலுள்ள கரும்பு வில்லை மறைத்துக்கொள்வாளும். அனங்கன் - மன்மதன். சிலை - கரும்பு வில். உறங்காக் கண் என்றது, மன்மதனுடைய கண்ணேக் குறித்தது: அன்றி, கரும்பிலுள்ள கணுக்களைக் குறித்ததாகவும் கொள்ளலாம். அப்பொருளுக்கு உறங்காக் கண் என்பது வெளிப்படை. உவா = யானே.