பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 1 5 70. காண்டா வனப்புகைபண் டுண்ட கடவுட்கா வேண்டா தெழுகாவில் விட்டதீ-ஈண்டுலகத் 71. தெக்கயமும் எக்களத்தும் கைக்கொண் டிருநான்கு திக்கயமும் மாறழியச் சீறிப்பின்-எக்கயத்தும் 72. பொங்கு குமுதமுடன் புண்டரிகம் என்கினும் அங்கும் புனல்கலக்கும் ஆலாலம்-எங்கும் 73. பலகங் கிடறிப் படுகட வெள்ளம் உலகம் கரந்துபரந் தோடிப்-பிலனுள் 74. திருப்புவன மும்பொற் சிவப்புவனம் மாற இருப்புவனம் செய்த இபக்கோ-செருப்போய்ப் 69-70. முன்பு அருச்சுனன் காண்டாவனத்தை எரித்தபோது அதன் புகை வானளவும் சென்று கற்பகக் காட்டை வாடச் செய் தமையின் அதை வேண்டா வென்று ஒதுக்கிப் பிற மன்னர்களுடைய ஏழு பொழில்களையும் அழிக்கவிட்ட தீப்போன்ற யானை, வேறு தி எச்சிற்படுத்தியதாதலின் அதை விட்டு மற்றப் பொழிலை அழித்தது. கடவுட்கா - கற்பகப் பொழில். கற்பகம் ஐந்து என்பது மரபாகலின் கா என்ருர் எழு கா - ஏழு தீவுகளில் உள்ள பொழில்கள். 71. எக்கயமும் - ஏவ்வகையான யானைகளையும். எக்களத்தும் - எந்தப் போர்க்களத்திலும். திக்கயமும் திசை யானைகளையும். மாறு அழிய - பகை கெடும்படி, எக்கயத்தும் எந்தக் குளத்திலும். - 71-2. எந்தக் குளத்திலேனும் குமுதம், புண்டரிகம் உண்டு என்று பெயரைச் சொன்னலும் அவ்விடங்களிலும் நீரைக் கலக்கித் தன் கோபத்தைக் காட்டியது. குமுதம் புண்டரிகம் என்பன, பொய்கை யில் வளரும் செங்குவளையையும் தாமரையையும் குறிப்பன. அவை இரண்டும் திசை யானைகள் எட்டில் இரண்டுக்குரிய பெயர்களாகவும் இருத்தலின் அவ் யானைகளை நினைந்து சாடியது. ஐராவதம், புண்ட ரிகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபெளமம், சுப்பிர தீபம் என்பன எட்டுத் திசை யானைகளின் பெயர்கள். ஆலாலம்: உருவகம். - 73-4. யானையின் மதம் எங்கும் பரந்து சென்று நாகலோகத்துட் புகுந்து அதன் செந்நிறத்தை மாற்றி, இரும்பைப் போன்ற கரிய நிறத்தை அடையச் செய்தது. யானை மதம் கரிய நிறமுடையது. கங்கு - கரை. கடவெள்ளம் - மதவெள்ளம். பிலனுள் திருப்புவனமும்பாதாளத்திலுள்ள அழகிய உலகமும். நாகலோகம் சிவப்புநிறமுடை யது. இருப்பு வனம் - இரும்பின் வண்ணமாகிய கருமை. இபக்கோ - தலைமையையுடைய யானை. - -