பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 {} சங்கர ராசேந்திர சோழன் உலா 94. மானத் துடியும் நெடியோன் வலம்புரியும் கானத் தியக்கர் கரநரம்பும்-மேல்நாள் 95. முனைத்த தருமன் முரசமும் நிற்ப 始 அனைத்தும் இயம்இயம்பி ஆர்ப்ப-நனைப்போ 96. திறைவன் மதிமகன் எண்புயத்தன் அல்லால் மறையர் புதர்பொருநர் வாழ்த்த-நிறையும் 97. புயலைப் பிரான்என்று பூமான் புகப்போம் இயலைப் படுதுரளி ஏய்ப்ப-வியன்மறுகில் 98. மன்னர் முடிஅடர்ந்து வீழ்ந்த மணித்துகளை அன்னர் தொடலைத்தேன் ஆறடக்க-இன்னணம் 94. மானத் துடி - பெருமையையுடைய உடுக்கை. இதுமுதல் இரண்டு கண்ணிகளில் இசைக் கருவிகளைச் சொல்லுகிரு.ர். நெடியோன்திருமால். கானத்து இயக்கர் கர நரம்பும் - இசைபாடும் இயக்கர் களுடைய கையில் உள்ள யாழும். நரம்பு : சினையாகு பெயர். 95. தருமன் - இயமன். இயம் - இசைக் கருவிகள். 94-5. துடிமுதல் முரசம் வரையிலுள்ளனவாகிய தெய்வங்களுக் குரிய இசைக் கருவிகள் அல்லாமல் மற்றவை முழங்கின. 95-6. நனேப்போது இறைவன் - தேனையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன். இவனுக்கு மறையவன் என்பது ஒரு பெயர். மதி மகன் - சந்திரனுடைய மகளுகிய புதன். எண் புயத்தன்-சிவபெரு மான், மறையர் - அந்தணர். புதர் - புலவர். பொருநர் - வீரர். மறையவரில் பிரமனே ஒழிந்தவர்களும், புதர்களில் மதிமகனுகிய புதனை ஒழிந்தவர்களும், வீரர்களில் இறைவனை அல்லாதவர்களும் வாழ்த்தி ஞர்கள். அட்டவீரட்டம் என்ற தலங்களில் எட்டுவகை வீரத்தைக் காட்டிய்வகைலின் சிவபெருமானப் பொருநகைக் கொண்டார். 97. புயலை - மேகத்தை பிரான் என்று - திருமால் என்று எண்ணி, பூ மான் - பூமி தேவி, புகப் போம் இயலை - அடைவதற்குப் போகின்ற தன்மையை. படு துளி - அங்கே உண்டாகிய புழுதி; சேபைராகம். கீழிருந்து துளி மேலே போவது, வானத்திலுள்ள மேகத்தைத் திருமால் என்று எண்ணி அவனே அடைவதற்குப் பூமி தேவி போவது போல இருந்தது. வியன் மறுகில் - விரிந்த தெருவில். 98. மன்னர்களின் மகுடங்கள் மோதியதனுல் கீழே விழுந்த மாணிக்கப் பொடியை அவர்களுடைய மாலையிலிருந்து ஆறு போல ஒழுகும் தேன் அடக்கியது. துகள் - பொடி. அன்னர் - அந்த மன்னர் கள். தொடலே - மாலை. இன்னணம் - இவ்வாறு.