பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 1 9 89. தென்னர் கனவட்டம் சேரலர் பாடலம் பின்னர்ப் பணித்தபணி பெற்றியங்க-முன்ஒருதம் 90. கோரக் கதிசெல்லக் கொல்லத்தர் பல்லவத்தர் பாரத்தர் மக்கர் பரதத்தர்-மாரட்டர் 91. ஈழத் தவர்.முதலோர் எண்இறந்த மாக்கடலும் வேழத் தெறிகடலும் மேற்போத-ஆழி 92. மழுத்திரி சூலம்அயில் வாள்குலிசம் சாபம் எழுத்திரள் ஆதிஇவை யாவும்-தொழிற்குச் 93. சுரர்.எடுத்த அன்றித் தொழுபடைஈட் டத்து நரர்.எடுத்த எல்லாம் நடப்ப-அரன் எடுத்த 89. பாண்டியருடைய குதிரையாகிய கனவட்டமும் சேரர்க ளுடைய குதிரையாகிய பாடலமும் ஏவல் கேட்டுப் பின் வர. 90. கோரக் கதிசெல்ல - சோழருடைய குதிரையாகிய கோரத்தி னுடைய வையாளி நடை முன்னலே போக. கொல்லத்தர் - மலை நாட்டிலுள்ள கொல்லத்திலிருந்து வந்தவர்கள். பல்லவத்தர் - பல்லவ மன்னர்கள். பாரத்தர் - கடற்கரைப் பக்கத்திலிருந்து வந்தவர்கள்; பாரம் கரை. மக்கர் - வெளிநாட்டிலுள்ள மக்கம் என்னும் நகரத்தி விருந்து வந்தவர்கள். பரதத்தர் - பரத கண்டத்தின் வேறு பகுதிகளி லிருந்து வந்தவர்கள். மாரட்டர் - மகாராட்டிர தேசத்திலிருந்து வந்தவர்கள்: மாராட்டர் என்பது எதுகை நோக்கிக் குறுகியது. பெரிய இராட்டிரகூட மன்னர் என்றும் பொருள் கொள்ளலாம். அவர்களை இரட்டர் என்று சொல்லுவது மரபு. 91. ஈழத்தவர் - இலங்கையிலிருந்து வந்தவர்கள். முதலோராகிய மாக்கடலும். ஆழி - சக்கரம்; இது திருமாலாயுதம். 92. அயில் - வேல். குலிசம் - வச்சிரப்படை. சாபம் - வில். எழுத்திரள் - இரும்புக்கணையத்தின் கூட்டம். 92-3. ஆழி முதல் எழுத்திரள் என்பது வரை உள்ளவை தேவர் களின் ஆயுதங்கள். 93. சுரர் எடுத்த அன்றி - தேவர்கள் ஏந்திய ஆயுதங்களை அல் லாமல், ஈட்டம் - தொகுதி. நரர் - மனிதர். தேவர்கள் எடுத்த ஆயுதங்களேயன்றி மற்ற எல்லாப் படைக்கலங்களும் இங்கே வந்தன. அரன் - சிவபெருமான்,