பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

差塑 சங்கர ராசேந்திர சோழன் உலா 104. காஞ்சித் திரள்அல்குல் காய்கிரணத் தோரணம் போம்சித் திரத்தேர் பொருவியும்-காஞ்சன 105. மாடமும் பீடிகையும் மன்றமும் அங்கணமும் கூடமும் மூழ்கக் குழிஇக்கொள்வார்-ஆடகப் 108. பூரண கும்பத்தும் பூகக் கனவனத்தும் காரண விற்கருப்பங் கானத்தும்-சேரும் 107. அரம்பைக் குலத்தும் அவன்பவனி வீதி நிரம்பப் புனைந்தென்ன நிற்பார்-அரும்பு 108. நகையார் முகிலில் நகைக்கும்மின் என்னப் - புகைஆர் அகில்பொதியப் போவார்-தகையோன் 109. குடையிடைப் பாய்ந்த கொழுநிலா வெள்ளத் திடையிடைப் பாய்அமுதம் ஏய்ப்பார்-கடமாம் 103-4. நீத்தன காஞ்சி - காஞ்சியை நீத்த; வடமொழி முடிபு. காஞ்சி - மேகலை. மேகலையை நீத்த உறுப்புக்குத் தோரணம் இல்லாத சித்திரத் தேர் உவமை. பொருவியும் - ஒத்தும், காஞ்சனம் - பொன், 105. பீடிகை-திண்ணை; மேடையுமாம். அங்கணம்-தாழ்வாரம், ஆடகம்- பொன். பணிமொழியார் (99) குழிஇக்கொள்வார் (105). 106. கும்பத்தும் - கும்பத்தாலும்; இது நகிலுக்கு உவமை. பூகக் கன வனத்தும் - கமுகாகிய பெரிய சோலேயாலும். கமுகு, கழுத்துக் குவமை. கார் அணவு இல் கருப்பங் கானத்து - மேகத்தோடு அளாவிய வீடுகளில் கட்டிய கரும்புக் கூட்டத்திலுைம். கரும்பு, ம்களிர் தோளுக் குவமை. 107. அரம்பைக் குலத்தும் - வாழைமரக் கூட்டத்திலுைம். 106-7. பூரண கும்பம், கமுகு, கரும்பு, வாழை ஆகியவற்ருல் சோழன் உலாவரும் வீதியை அலங்கரித்தாற் போல, அவ்ற்றுக்கு ஒப் பான நகில், தழுத்து, தோள், துடை என்பவற்றேடு மகளிர் நின்றன்ர். அரும்பு - முல்லை அரும்பு. 108. அகிற்புகைக்கு மேகமும் மகளிர்க்கு மின்னலும் உவமை. தகையோன் - தகுதி உடையவன்; அழகுடையவன் என்றுமாம். 109. குடைகளில்ை பரவிய நிலாவெள்ளத்தின் இடையே பாய்ந்த அழுதத்தை ஒப்பரர். சந்திரனிடத்தில் அமுதம் உண்மையின் இவ்வாறு கூறினர். குடைக்குச் சந்திரனும் அதன் ஒளிக்கு நிலர்வும் ம்களிர்க்கு அமுதமும் உவமைகள். -