பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 芝、 110. தளிவிடு மாமலையச் சாமரைத் தென்றற் கொளிவிடு மாந்தளிர் ஒப்பார்-அளியோடும் 11.1. தீனர்க் குதவச் சிதறிய பொன்மறுகில் ஏனற் களக்கிளியின் எய்துவார்-தானைப் 12. பெரிதிரை வாரிப் பெருந்துரகம் என்னத் திரிதிரை ஒதிமத்திற் செல்வார்-அரிவைபeர் 113. பொன்நா டனைத்தாளும் புத்தேட் புனிதவனத் தொல்நா டனநாம் தொழவாரீர்-பொன்னி 114. நதிராச ராச திவாகரனை நாகப் பதிராச சேகரனைப் பாரீர்-முதுதவம் 115. சங்கர வேந்தன் சரணம் தொழஇந்தச் செங்கரம் மேவு செயல்பாரீர்-எம்கோன் 109-10. மதமாகிய துளியை வீசுகின்ற பொதியிலைப் போன்ற யானையின் காதிலுள்ள கவரி வீசும் தென்றற் காற்றுக்கு ஒளி விடு கின்ற மாந்தளிரைப் போல்வார். தளி - துளி. தென்றலால் மாந் தளிர் ஒளி பெறும். அளி - அன்பு. 111. தீனர் - ஏழையர். அரசன் உலா வரும்பொழுது வீதியில் காசுகளை இறைப்பது வழக்கம், ஏனல் களம்-தினைக் கொல்லை. பொன்னை இறைக்கும் வீதிக்குத் தினைப்புனமும் மகளிர்க்குக் கிளியும் உவமை. 11:1-2, தானையாகிய வாரி. பெரிது இரை வாரி, பெரிது இரைமிகுதியாக ஒலிக்கும். வாரி - கடல். சேனைக்குக் கடலும் குதிரைக்கு அலையும் மகளிருக்கு அன்னமும் உவமை, ஒதிமம் - அன்னம். 112-25. குழாங்களின் கூற்று. 113. பொன் நாடு - வானுலகம். புத்தேள் புனித வனத்தொன் ளுடன் - இந்திரன். சோழனை இந்திரளுகச் சொன்னபடி. 113-4. பொன்னி நதி - காவேரியாறு. நாகப்பதி - நாகருலம். 114-5. இந்தச் செங்கரம் மேவு செயல் - இந்த நம்முடைய கரங்கள் பொருந்திய செய்கையை தவம் கரம் செய்ததாகச் சொல் கிருர்கள்.