பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 25 122. இத்தலையர் கண்ணேகண் ஆகியே முக்கிமையா அத்தலையர் கண்ணேகண் ஆகென்பார்-இத்தாம 123, நேரியனை நேரலர் காலனைப் பூலோக சூரியனை ஏற்போம் தொழுதென்பார்-பார்முழுதும் 124. மாதா தகியாய் வனம்.அனைத்தும் தோற்றிடினும் போதா துதவுகைக்கிப் போதென்பார்-வேதாவுக் 125. கெண்ணற் கருந்தவம் எத்தருவும் இத்தருவாய்ப் பண்ணற் கிழைத்திலோம் பண்டென்பார்-கண் அழகால் 126 கொற்றக் கரடதடம் அன்றிக் கொலைக்களிறு முற்றக் களிவண்டாய் மூய்க்கொள்வார் கொற்றமனு 122. இத்தலையர் கண்ணே கண் ஆகியேமுக்கு - இந்திலவுலகத் தில் உள்ளவர்களின் இமைக்கும் கண்களே கண்கள்ாகப் ப்ெற்ற எமக்கு. இமையா அத்தலேயர் கண்ணே கண்ணுக - வானுலகத்தில் உள்ள தேவர்களின் இமையாத கண்களே எங்களுக்குக் கண்களாக; இமையா நாட்டம் பெற்றிலம் என்ருர் (கம்ப. மிதிலைக் காட்சி). தாமம் - மாலை. 123, நேரி என்பது சோழனுக்குரிய மலை, நேரலர் - பகைவர். ஏற்போம் . எதிர்கொள்வோம். - 124. தாதகி - ஆத்தி. இது சோழனுடைய அடையாள மாலை. உலகத்திலுள்ள காடுகளிலெல்லாம் ஆத்தி மரங்களே வளர்ந்தாலும் கூட்டமாக உள்ள மகளிர்க்குக் கொடுக்கப் போதாது என்றபடி வேதா பிரமன், 124-5. எல்லா மரங்களும் ஆத்தி மரமாகப் படைக்கும்படி பிரமனை நோக்கி நாம் தவம் செய்யவில்லை. அருந்தவம் இழைத் திலோம். 125-6. கரட தடம் - மதம் தோற்றும் இடங்கள். இவை மூன் றென்றும் ஏழென்றும் கூறுவர். மதநீர் மணமுடையதாதலின் அதில் வண்டு மொய்க்கும். மகளிர் பட்டத்து யானை உடல் முழுவதும் பார்ப்பதனால் அதன் உடல் முழுதும் வண்டுகள் மொய்த்தது போலா யிற்று. வண்டாய் மூய்க்கொள்வார் - கண்ணழகால் வண்டாய் மொய்த் துக் கொள்வார். - 4