பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 6 சங்கர ராசேந்திர சோழன் உலா 127. துங்கன் உறுப்பில் சிலஅலது சூழ்ந்தெல்லா அங்கமும் பங்கயக்கா டாக்குவார்-திங்களும் 128. தென்னர் நிமித்தம் மறைந்தென்னச் செம்முகமும் முன்னர் விழிக்கலுழி மூழ்குவார்-தென்னர்பால் 129, மீன் இருக்கை செய்கலா வெம்புவிக் கம்புலியை மான்இருக்கை என்ன மறைக்கிலார்-வேனிலான் 130. இக்குவளை வில்லால் வருங்குவளைக் கேங்கித்தம் மைக்குவளை திக்கு வளைவிப்பார்-கைக்குவளை 125-7, மனு துங்கன் - மனுகுலத்தில் தோன்றிய பரிசுத்தமான வன். சூழ்ந்து - உள்ளத்தால் நினைந்து. உள்ளத்தை இதயகமலம் என்பராதலின் அக்கமலத்தைச் சார்த்தியதால் சோழனுடைய எல்லா உறுப்பையும் தாமரை போலத் தோன்றச் செய்வார். உறுப்பிற் சில வென்றது, கண், முகம், வாய், கை, கால் ஆகியவற்றை. இயல்பாக அவ்வுறுப்புக்களே தாமரையாகத் தோற்ற, இப்பொழுது மகளிர் இதய கமலத்தை வைத்தலால் மேனி முழுதும் பங்கயக் காடாயிற்று. மனத்தைப் பூவாக வைத்து அதைச் சேர்த்துவதாகச் சொல்வது இவ் வாசிரியர் இயல்பு; கண்ணி, 345 பார்க்க. 127-8. தென்னர் நிமித்தம் - தோல்வியுற்ற பாண்டியர்களின் பொருட்டு. விழிக் கலுழி - கண்ணிர் வெள்ளம். தோல்வியுற்ற பாண் டியரை எண்ணி அவர்களுடைய குல முதல்வனகிய சந்திரன் மறைந் தது போலத் தங்கள் முகங்களைக் கண்ணிரிள் மூழ்கச் செய்து மறைப் i }{TFT . 129. மீன் - பாண்டியருடைய கொடி. வெம்புலி - சோழருடைய கொடி. வேனிலான் - மன்மதன். 12.8-9. பாண்டியர்களுடைய கொடியாகிய மீனை நிலைத்திருக்கச் செய்யாமல் ஒட்டிய சோழனுடைய கொடியாகிய புலிக்கு உணவாகும் மான் இருக்கும் இடமென்று சந்திரனை மறைக்கவில்லை. 127-9. முகத்தை மறைத்தவர்கள் அம்புலியை மறைக்காத தற்குக் கற்பனையாக ஒரு காரணம் கூறினர். 130. இக்கு வளை வில்லால் - கரும்பாகிய மன்மதன் வளைக்கும் வில்லினல். குவளை மரணத்தை உண்டாக்கும் அம்பாத்லின் ஏங்கினர்; முழுநீலம் மாதே, கொல்லுமதன் அம்பின் குணம்’ (பழம்பாடல்). மைக்குவளை - மையை அணிந்த கண்களை: உவம ஆகுபெயர்.