பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 2 7 131 இல்லேம்எம் ஆவி இனிக்கணம் தாழ்க்கினும் நில்லேம்என் றுண்மை நிகழ்த்துவார்-மெல்ல 132. இழையும் இளந்தென்றல் என்கின்ற தீயில் குழையும் மெழுகிற் குழைவார்-மொழிஇழப்பார் 133. மேதை இழப்பார் பசந்துதம் மெய்இழப்பார் கோதை இழப்பார் குழாத்தொருத்தி-பேதை பேதை 134 உருவத் திளைஞர்க் குறுகண் விளையாப் பருவத் தடுத்த படியே-அருகோம்பும் 135. அன்னம் மயில்கிள்ளைக் கெல்லாம் அலம்வருகைக் கின்னம் அவயவத் தீட்டிலாள்-நன்னிறச் 136. செந்தேன் கடல்முகந்து சேர்ந்த தொருபுயலை வந்தே கலைத்தன்ன வார்குழலாள்-பிந்தா 130-31. கைக்கு வளை இல்லேம்-உடம்பு மெலிந்தமையால் கையில் வளை இல்லாதவர்களாைேம். ஆவி நில்லேம், 132. இழையும் . வீசும். 133 மேதை அறிவு, பசந்து - பசலை பூத்து. மெய் - உடலின் நிறம். கோதை - மாலையை. - 134 உறுகண் - துன்பம், இளைஞர்களுக்குத் துன்பம் விளையாத பருவம் என்ற்து, ப்ேதைப் பருவத்தை. அருகு ஒம்பும் - அருகில் வைத்துப் பாதுகாக்கும். - - 135. அலம்வருகைக்கு தன்னுடைய நடை முதலியவற்றைக் கண்டு மனம் கலங்குவதற்கு. அலம்வருதல் - சுழலுதல்; இங்கே மனம் சுழலுதல். அவயவத்து ஈட்டிலாள் - தன் உறுப்புக்களில் தகுதியைப் பெருதவள். அன்னம் நடையைக் கண்டும், மயில் சாயலைக் கண்டும், கிளி மொழியைக் கேட்டும் வெட்கி வருந்தும் அளவுக்கு அவளுடைய உறுப்புக்கள் பருவ முதிர்ச்சி பெறவில்லை. 136. புயலை - மேகத்தை. வந்து காற்று. மேகத்தைக் காற்றுக் கலைத்தால் அது ஒன்றுபடாமல் கலந்திருப்பது போல, முடியாமல் கலந்திருக்கும் கூந்தலை உடையவள். செந்தேன் கடல் முகந்து சேர்ந்த புயல் என்றிதல்ை, சிறிதளவு செந்நிறம் உடைய கூந்தல் என்று கொள்ள வேண்டும். ப்ேதைப் பருவத்தில் கூந்தலில் முழுக்கருமை இராது.