பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 சங்கர ராசேந்திர சோழன் உலா 137. தடையும் பெருநிருத்தர் ஆட்டமர் ஆட்டின் மிடையும் பகழி விழியாள்-இடையிடைபல் 38. போயனவும் போகா தனவும் புடைத்துாட்டு தாயர் முலையூற்றில் சாற்றுவாள்-துளயவாம் 139. துண்டத் திகிரிக் குருகு தொகுத்தபே ரண்டத் தினேஅனய ஆகத்தாள்-வண்டல்வாய்ச் 140. சேயும் வதுவை முலைவிலையும் செய்வதுவைக் கேயும் உறவோர்க் கிடுசோறும்--சேயிழைதன் 137. நிருத்தர் ஆட்டு அமர் ஆட்டின் மிடையும் - நாடகம் ஆடு வார் கூத்தில் நடைபெறும் போரில் செறியும். பகழி - அம்பைப் போன்ற நாடகத்தில் கைச்கொண்ட அம்பு உருவத்தால் அம்பு போல இருந்தாலும் அது யாரையும் குத்தாது; அதுபோல் பேதையின் விழியும் யாரையும் துன்புறுத்தாது. 137-8. புடைத்து - பருத்து. ஊட்டு - உண்பிக்கின்ற. முலையூற் தில் -நகில்களில் பேதை வாய் வைத்துப் பாலருந்தும்போது உண் டாகும் பரிசத்தால். சாற்றுவாள் - புலப்படுத்துவாள். பாலுண்ணும் போது உற்போன இடமும் பல்லுள்ள இடமும் நகிலில் தெரியுமாத லால் இவ்வாறு கூறினர். 139. துண்டத் திகிரிக் குருகு - மூக்கையுடைய சக்கரவாகப் பறவை. தொகுத்த பேர் அண்டத்தினே அனேய- மறைத்துவைத்த பெரிய முட்டையைப் போன்ற. ஆகத்தாள் - மார்பை உடையவள். நகிலுக்குச் சக்கரவாகப் பறவையை உவமை கூறுதல் மரபு முலைக்கும் நடைக்கும் முதற்பகை நாமென் - றுடைப்புண்டு, பின்னர்ப் பெருஞ் சக்ர வாகப் பெருங்குலமும், அன்னக் குலமு மலம்வர’ (இராசராச. 282-3.) முட்டை அப்பறவையை மறைத்துவைத்திருத்தலைப் போலப் பேதையின் மார்பு நகிலை மறைத்து வைத்திருக்கிறது; இன்னும் தோன்ற வில்லை என்பது கருத்து. வண்டல்வாய் - விளையாடும் இடத்தில். 140. சேய் - மரப்பாச்சி. வதுவை முலைவிலே - கல்யர்ணத்துக் குரிய சீதனம்; பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்போது காதலன் தரும் சீதனத்தை முலைவிலை என்று கூறுவது பழைய மரபு. வதுவைக்கு ஏயும் உறவோர்க்கு - திருமணத்துக்கு வரும் உறவினருக்கு. சோறு - சிறுசோறு, மணற் சோறு, - x- .