பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 2姆 141. மாற்றவள் என்ப துணராது மன்இருதோள் ஏற்றவள் பால்ஏற்றும் எல்லைக்கண்-மா ற்றலர் 142. காலனச் செங்கமலே காந்தனைச் சக்ரபரி பாலனைச் சோணுடர் பார்த்திபனைச்-சீலனைச் 143. சங்கர ராச தயாநிதியைச் சங்காழிச் செங்கர ராச சிகாமணியை-வெங்கரமாக் 144. கொண்டு புகப்புகுந்து கோள்தாயர் போதப்போய்க் கண்டு தொழத்தொழுது காமுருள்-விண்தோயும் 145. நாவலந் தீவெல்லாம் நாற்கடல் காக்கும்ஒரு காவலன் பூண்ட கவுத்துவத்தே-ஆவலளாய் 146. வாங்குமின் வண்டற் குழவி மணஅணிக்கென் ருங்கு மடிஅலைப்ப அன்னமார்-தாங்கலராய்த் 140-41. பேதை தரையில் சிற்றில் கட்டிச் சிறு சோறு இடு வதைக் கூறுகிருர் மாற்றவள் - சக்களத்தி. மன் இரு தோள் ஏற்றவள் பால் அரசனது இரண்டு தோளையும் தனக்குரியனவாக ஏற்ற பூமி தேவியினிடம்; தரையில், சோழன் தன் தோளில் பூதேவியைச் சுமக் கின்ருன். அவனைத் திருமாலாக வைத்து, அவனுடைய தேவியாகிய பூதேவியை மாற்றவள் என்ருர். பேதை பருவம் அடைந்தால் சோழனை அடைவதற்குரியவளாதலின் பூதேவியை அவளுக்கு மாற்றவள் என்ருர், பேதையாதலின் அவள் தனக்குச் சக்களத்தி என்பதை அறியாளாயினுள், சேய் முதலியவற்றை ஏற்றும் எல்லைக் கண். ஏற்றும் - கட்டும். எல்லைவேளை. மாற்றலர் - பகைவர்களுடைய. - 142. செங்கமலே காந்தன் - திருமகள் கணவருகிய திருமால். சக்ரபரிபாலன் - சக்கரவர்த்தி. 143. சங்கு ஆழிச் செங்கர ராச சிகாமணியை - சங்கையும் சக் கரத்தையும் செம்ம்ையான கரத்தில் ஏந்திய, அரசர்களுக்குள் தலைவனே, வெங்கர மா - வெவ்விய துதிக்கையையுடைய பட்டத்து யானை, 144. கோள்தாயர் - செவிலித் தாய்மார். காமுருள்-சோழனிடம் காதல் கொள்ளவில்லை. - - 145. நாற் கடல் - சதுரங்க சேனையாகிய கடல். கவுத்துவம் - மார்பில் அணிந்த மணி. பேதையாதலின் சோழன்பால் காதல் உருமல் அவன் மார்பில் அணிந்த மணிக்கு ஆசைப்பட்டாள். 146. வண்டல் குழவி - சிற்றில் விளையாட்டில் கைக்கொள்ளும் குழந்தை; மரப்பாச்சி; இதைக் குழமகன் என்பர். மடி அகலப்ப - மடியைப் பிடித்து இழுக்க. தாங்கலராய் - பேதையின் நச்சரிப்பைப் பொறுக்காதவர்களாய். -