பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 G சங்கர ராசேந்திர சோழன் உலா 147 தூண்டிய மாவைத் தொழுது முழுதளந்த பாண்டியர் ஆரத்தின் பல்கலமோ-ஈண்டிப் 148, பொரவிட்ட சேரர் மலாடு புறந்தந்து வரவிட்ட வக்ர வடமோ-நிருபர் 149 முழங்கிய போர்தொலைப்ப மூதண்டர் லோகம் வழங்கிய சிந்தா மணியோ-கொழும்குதலைப் 150. பண்நிறைந்த நாகர் மகள்மணத்துப் பாரித்த எண்இறந்த மாணிக்க ராசியோ-நண்ணும்.இது 151, வையம் அளிப்ப மனுகுலத்து மால்வந்த செய்ய அறிகுறிச் செய்கைகாண்-கைவருந்தத் 152. தான்ஒர் கிரிதிரித்துத் தன்திருப் பாற்கடலில் வானே ருடன்கடைந்து வந்ததுகாண்-தேன்நளினத் 147. தூண்டிய மாவை - செலுத்திய யானையை. இது முதல் 154 வரை தாயர் கூற்று. ஆரம் - முத்து. கலம் - அணிகலன். பாண்டி நாட்டில் முத்து மிகுதியாதலின் அவ்வரசர் முத்துக்கலன்களே இட்டனர். 'பூழியர்கோன், தென்னடு முத்துடைத்து’’ (தனிப்பாடல்.) 148. மலாடு - மலை நாடு. புறந்தந்து முதுகிட்டு; தோற்று; பாதுகாத்து எனலுமாம். வச்ர வடம் - வயிரமாலை. மலையில் வைரம் விளையும்; "மாமலை பயந்த காமரு மணியும்’ (புறநா. 219); அசல குவி வச்ரப் பலகை' (குலோத்துங்க. 41.) 149. அண்டர் லோகம் - தேவருலகம். சிந்தாமணி இந்திரனிடம் உள்ளது. . 149-50. வளமான குதலையாகிய பண் நிறைந்த ஒரு சோழன் நாக கன்னிகையை மணந்த செய்தியை நினைந்தது இது (கண்ணி, 8.) பாரித்த - பரப்பிய, - 151 உலகத்தைக் காப்பதற்காக மனுவம்சத்தில் அரசனகத் திருமால் வந்ததற்கு அடையாளமாக அமைந்தது. அறிகுறிச் செய்க்ைஅடையாளமாக வைத்த செயல். கெளத்துவ மணி திருமால் மார் பில் உள்ளது. : - - - 152. தேவர்களுடன் திருமாலும் ஒரு கை கொடுத்துப் பாற் கடலேக் கடைந்தான் என்பது புராண வ்ரில்ாறு, வடவரையை மத் தாக்கி வாசுகியை நாணுக்கிக் கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்