பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 3 I 153. தேவியும் ஈதும் உடன்பிறந்த செல்வம்காண் ஓவிய மற்ருேர்க் குருதுகாண்-தேவி 154 பிறியாமை ஒக்கும்.இப் பெய்மணிக் கென்றன் றறியாமை பாவைக் கமைத்தார்-தெறுகாமன் 155. மானே வந் தெய்யாது போத மனுவேந்தன் - சேனையும் தானும் தெருக்கடந்தான்-கோன 156. எழுபங்கின் ஒர்பங்கு வென்ருேர்உண் டென்னத் தொழுபங் கயக்கைத் தொடியும்-பழவடிவும் 157. சிற்றிடையும் கொண்டு திருமீண்டாள் ஈதொருத்தி பெற்றுடைய தப்பால் பிறிதொருத்தி-முற்றுகை வயிறு கலக்கினேயே’’ (சிலப். ஆய்ச்சியர் குரவை). கிரி திரித்து - மந்தர மலையாகிய மத்தைச் சுழற்றி. பாற்கடலை அமிர்தத்துக்காகக் கடைந்தபோது வந்த பொருள்களுள் கவுத்துப மணியும் ஒன்று. 153, தேவி - திருமகள். ஒவிய மற்ருேர்க்கு அவர்களினின்றும் நீங்கிய மற்றவர்களுக்கு அவள் அல்லாதவர்களுக்கு. 153-4. தேவி பிறியாமை இப் பெய்மணிக்கு ஒக்கும் - திருமகள் எவ்வாறு திருமால் திருமார்பைப் பிரியாமல் வாழ்கிருளோ அவ்வாறு பிரியாத் தன்மை இந்த மணிக்கும் பொருத்தும்; உம்மை தொக்கது. பாவைக்கு அறியாமை அமைத்தார் - பேதைப் பெண்ணுக்கு அறியா மையைப் பொருந்தச் செய்தார்; நீ கேட்பது அறியாமை என்பதைத் தெரிவித்தார் என்றபடி, தெறு போர் செய்யும். 155. மானை - பேதையை. 156. எழுபங்கின் ஒர் பங்கு வென்ருேர் உண்டு என்ன - மகளிர் கூட்டத்தில் தாம். மயலுண்டு தோல்வியுருமல் வென்றவர்கள் ஏழில் ஒரு பங்கினராகிய பேதைப் பருவத்தினர் உண்டு என்று சொல்ல. மற்றவர்கள் அவன் அழகுக்குத் தோற்றுக் காமுறப் பேதை சிறிதும் காமுழுது இருந்ததையே வென்றதாகச் சொன்னர். தொடி - வளை. பழவடிவு - வந்தபோது இருந்த வடிவம். - . 157. திரு பேதை, மற்றப் பருவத்து மாதர் கைவளை நழுவ, வடிவு வேருகி இடை தளர்ந்து மயலில் உழப்பர். இவள் அவ்வாறு ஆகவில்லை. ஈது ஒருத்தி பெற்றுடையது - இது ஒரு பெண் பெற்ற நிலை. முற்றுகை நிறைவு,