பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

კ % சங்கர ராசேந்திர சோழன் உலா பெதும்பை 158. கூடாச் சகோடம் தனிபாடிக் கூட்டமுடன் பாடாப் பெதும்பைப் பருவத்தாள்-ஓடாது 159. குன்றெட்டும் நாம்எழுந்து கோபித்தால் ஆற்றுங் கொல் என்றெட்டிப் பார்க்கும் இளமுலையாள்-மன்றத்து 160. மண்அணிந்தார் தம்கண்ணும் மண்ணி அணிஅகலக் கண்அணிந்தார் தம்கண்ணும் கண்அணிவாள் தண்மதிக் 161. கோடித் திரிதிமிரம் ஆற்ரு துடன்புணரக் கூடித் திரண்டனைய கொண்டையாள்-பாடு 162. குறுகநாட் கொள்வன கொங்கையென் றுள்ளம் ம்றுகநாட் கொள்ளும் மருங்காள்-மறுகில் 158. சகோடம் - சகோட யாழ். தனியே பாடுவாளேயன்றி மங்கையருடன் சேர்ந்து பாடாதவள். 159, சிறிதே நகில் தோற்றும் பருவம் இது. மன்றம் பொது விடம்: தெரு. . 160, மண் அணிந்தார் - மண்ணைப் பூசிக்கொள்ளும் பேதைப் பருவப் பெண்கள்: மண்ணுல் இல் முதலியவற்றைப் புனைந்தவர் என்றும் கொள்ளலாம். மண்ணி அணி அகலக்கண் அணிந்தார் - நீராடித் தம் திருமார்பில் அணிகலன்களை அணிந்த மங்கைப் பருவ மாதர், பேதையர் கண்ணையும் மங்கையர் கண்ணையும் தன் கண்ணிலே பூண்டவள்; என்றது பேதைத் தன்மையும் மங்கைத் தன்மையும் இணைந்தவள் என்றபடி, ஆர்வத்தால் மங்கையின் நிலையும் இன்பம் துய்க்கும் பக்குவம் இன்ன்மயால் பேதையின் நிலையும் உள்ளவள் ஆதலின் இருவகைப் பார்வையும் உள்ளவள் என்ருர், 161. திமிரம் இருள். இருள் திரண்டாற் போன்ற கொண் டையை உடையவள். பாடு தனக்கு அழிவு. - 162 நாட்கொள்வன தோற்றத் தொடங்குவன. உள் ள ம் மறுக - மனம் வருந்த நாட்கொள்ளும் தோன்றும். மருங்கு-இடை. மங்கையைப் போல அடியோடு தோற்றமின்றி இராமல், சிறிதே தோற்றும் இடையுடையாள் என்றபடி, மறுகில் - தெருவில்