பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 3岳 175. இருப்புறும் மஞ்ஞை வரினும்இள மஞ்ஞை விருப்புறும் அல்லால் மிகுமே-திருப்பதுமன் 176. அன்னம் புகினும் அடாத இளம்பேடை தன்நண் பலது தழுவுமே-பொன்.உலகிற் 177. கோலக் களிறு பெறினும் குழைவொழிந்து வாலப் பிடிபோய் மணக்குமே-நீலிதன் 178. வெங்கட் பரிஉறினும் வேட்கை சிறிதன்றிச் சிங்கத் திளம்பினவு செல்லுமே-எம்கோணத் 179. தாய ரொடும்வணங்கித் தாதகியில் வீழ்ந்தெழும் பாய சுரும்பென்னப் பார்த்தொழிந்தாள்-நாயகன் 175. இது முதல் 179 வரை பெதும்பை சோழனைக் கண்டு ஒரளவு விருப்பம் கொண்டாலும் மயலால் சோர்வுருமையை உவமை களால் எடுத்துரைக்கிருர், - . - இளமஞ்ஞை : எழுவாய். பெட்டைமயிற். குஞ்சு முருகனுடைய மயில் வந்தாலும் விருப்பம் கொள்ளுமேயன்றி அதற்குமேல் சென்று இன்புற முயலுமோ, மிகுமே ஏகாரம், வின, பின் வரும் ஏகாரங் களும் அத்தகையனவே. பதுமன்- பிரமன். 176. அடாத - நெருங்காத நண்பு அலது - நட்புக் கொள்ளு வதையன்றி. பொன் உலகின் தேவலோகத்திலுள்ள 177. கோலக்களிறு-அழகையுடைய ஐராவதம். குழைவு ஒழிந்துகுழைந்து நிற்றலையன்றி. வாலப்பிடி - பெண் யானைக்குட்டி. நீலி - கொற்றவை. - * . . . • . . - - - - 178. வெங்கண் பரி - வெம்மையான கண்ணையுடைய வாகனம்; என்றது சிங்கத்தை. - சிறிது வேட்கையன்றி. சிங்கத்து இளம் பிணவு பெண் சிங்கக் குட்டி, 179. தாதகி - ஆத்திமாலை. அதில் விழுந்து தேன் உண்டு மயங்கி விடாமல் எழுந்து பறக்கும்வண்டைப் போல. பாய-பரவிய, இங்கே, பறந்த சுரும்பு - வண்டு. பார்த்து ஒழிந்தாள் - பார்ப்பதை பன்றி மயங்குதல் முதலியன செய்யாது ஒழிந்தாள். r.: