பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சங்கர ராசேந்திர சோழன் உலா 169. நிவப்போடு தூதுதரும் நேரியன் மாலைக் குவப்போடு முன்செல்வ தோர்ந்தும்-இவைக்கய 170. தூரில் சருகேனும் சூடுதும் என்றந்த (லாய்த் ஆரிற் பொழில்அடுப்ப தாராய்ந்தும்-போரில் 171. சினக்கும் மதகளிற்றுச் சென்னிவரச் சேவித் தெனக்கும் இதுவருங்கொல் என்று-மனத்தில் 172. வளையாடும் கைத்தோகை வாஞ்சித்தா யத்து - விளையாடும் சோலைப்போம் வேலை-வளவன் 173. உபய குலோத்தமன் உத்துங்க துங்கன் அபயன்அக ளங்கன் அபங்கன்-புவிவனிதை 174. காந்தன் அனந்த கலாகரன் தென்உறந்தை வேந்தன் உலாப்போத மின்போந்து-சேந்தன் 169. நிவப்பு - ஊக்கம், முன் செல்வது - தாதுப் பறவைகள் முன்னே போவதை. - - . 170. தூரில் - மரத்தடியில். ஆரிற் பொழில் - ஆத்தி மரத்தால் அமைந்த சோலையை சோழன் அணிந்த ஆத்தி மாலையைச் சூடும் பேறு கிடைக்காவிட்டாலும் ஆத்தி மரத்தின் கீழ் உதிர்ந்துள்ள சருகை பாவது சூடுவோம் என்று போளுர்களாம். . . . . . . 171-2. சென்னி - சோழன். மற்ற மாதர் காமத்தால் செய்வன கண்டு, எனக்கும் இந்த நிலை வருமா?’ என்று பெதும்பை விரும்பினள், மனத்தில் வாஞ்சித்து; வாஞ்சித்து - விரும்பி. ஆயத்து விளையாடும் - மகளிர் கூட்டத்தோடு விளையாடுகின்ற. வேலை - நேரத்தில். வளவன்சோழன். - . . . . . . - - 173. உபயகுலோத்தமன் - தாயின் குலம், தந்தையின் குலம் ஆகிய இரண்டும் உத்தமமாக அமைந்தவன். உத்துங்க துங்கன் - மிக உயர்வான தூயவன். அபயன் - அச்சமற்றவன். அகளங்கன் - களங்கமில்லாதவன். அபங்கன் - ப்ங்கம் அற்றவன், 17.4. அனந்த கலாகரன் - பல கலைகளுக்கும் இருப்பிடமானவன். மின் - பெதும்பை, சேந்தன் - முருகன்.