பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 39 195. அணியூத்த மாமயிலுக் கம்பொற் சுணங்கிற் கணிபூத்த காடு கடுத்தும்-துணைபிரியா 196 அன்னக் கணத்துக் கடிதொடிக் கைவதனம் வன்னக் கமல வனம்நேர்ந்தும்-பன்மையாய் 197. எய்துழை மாலைக் கிடைப்பசிய காஞ்சியிற் கொய்தழை வல்லிக் குலம்போன்றும்-செய்ய 198. திருமால் நிறத்துச் சிறக்கும் குயிலுக் குருமாந் தளிர்க்கானம் ஒத்தும்-அருகே 199. விருப்ப இமாடுதிரண்டு வெண்ணிலா முற்றத் திருப்ப இருந்ததோ ரெல்லே-ஒருத்தி வாயால் - தம் வாய்களினல். கோவை அடவிக் குழாம் ஏய்ந்தும்கோவைப் பழக் காட்டின் கூட்டத்தை ஒத்தும். கிளிக்குக் கோவைக் கனி உவப்பானது. மங்கையர் வாய் கோவைப் பழம் போல இருப்பது. வாயால் ஏய்ந்தும் என்று கூட்டுக. துளவி - சிறகு. 195. பொற் சுணங்கின்-பொன்னிறம் பெற்ற அழகுத் தேம்லினல். கணி பூத்த காடு - வேங்கை மலர் பூத்த காடு. கடுத்தும் - ஒத்தும். சுணங்குக்கு வேங்கை மலர் உவமை; நளிச்சினே வேங்கை நாண்மலர் தச்சிக், க்ளிச்சுரும் பரற்றும் சுணங்கின்' (சிறுபாண். 23-4). மயில் வேங்கை மர்த்தில் விரும்பித் தங்கும்: பூத்த வேங்கை வியன்சினே யேறி, மயிலின மகவும் நாடன்' (பழம்பாடல்). 196. தொடிக்கை வளையை அணிந்த கை. கமல வனம் - தாமரைக்காடு. அன்னப்பறவைகளுக்கு ஏற்ற தாமரைவனம் போல அடி முதலியன இருந்தன. 197, உழை மாலைக்கு-மான் வரிசைக்கு. இடைபசிய காஞ்சியின்இடையில் அணிந்த மரகதக் கல்லால் அமைந்த மேகலையில்ை: எட்டுக் கோவையையுடைய மேகலைக்குக் காஞ்சி என்று பெயர். தழைவல்லிக் குலம் - தழையையுடைய கொடியின் கூட்டம். - 198. திருமால் நிறத்து. திருமாலின் கரிய நிறத்தைப் பெற்ற. உரு - நிறம். மாந்தளிர்ச் கானம் -தளிரையுடைய மாந்தோப்பு. உரு ஒத்தும். மாமரம் குயிலுக்கு விருப்பமானது: அடைகரை மாஅத் தலங்குசினை யொலியத் தளிர்கவி_னெய்திய தண்ணறும் பொதும்பிற், சேவலொடு கெழீஇய செங்க ணிருங்குயில்' (நற். 118.) பாவையர் (194) அருகே (198) இருப்ப (199) எனக் கூட்டுக. • , 199. ஒருத்தி - ஒரு தோழி.