பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# (; சங்கர ராசேந்திர சோழன் உலா 200. அதிர்ந்தது பேரியம் ஆர்த்தது சங்கம் உதிர்ந்தது பூமாரி ஒரை-எதிர்ந்த 201. திரவி குலன்அபயன் இப்பவனி யிற்போய்ப் பரவி இழக்கப் படுமுன்-நிரைவளையைத் 202. துன்ன நெருக்குமின் வீக்கித் துகில்உடுமின் இன்னம் மணிக்கச் சிறுக்குமின்-மின்னனையாட் 203. கென்ருள் இவள்பண் டிழந்தறி யாக்குறை - சென்ருள் மதித்தொன்றும் செய்கலாள்-முன்றில் 2 04. கடைகடந்தாள் சூழ்போம் கடல்ஆய வெள்ளத் திடைகடந்தாள் தானே எதிர்ந்தாள்-அடையப் 205. புரந்த புவனசத கோடியும் ஒடிப் பரந்த திகிரிப் பகலோன்-நிரம்பும் 200. பேர் இயம் - முரசு முதலிய பெரிய இசைக் கருவிகள். ஒரை - அரசன் வரும் முகூர்த்தம். எதிர்ந்தது- வந்தது. 201. இழக்கப்படுமுன் -வளை முதலியவை இழக்கப்படுவதற்கு முன்னே. நிரை வளையை - வரிசையாக அணிந்த கை வளைகளே. 202. துன்ன நெருக்குமின்-நழுவாமல் செறியும்படி நெருக்குங்கள். விக்கி - இறுக்கி, இன்னம் - இப்போது இறுக்கினதற்கு மேலும், மின்னனையாட்கு - மங்கைக்கு. . . . . . 201-2, மின்னணயாட்கு வளையை நெருக்குமின், துகிலுடுமின், கச்சு இறுக்குமின். ஒருத்தி (199) என்ருள் (208), 208. இவள் - மங்கை. குறை - குறையினல், மதித்து - தோழி கூறியவற்றை உளங்கொண்டு. ஒன்றும் செய்கல்ாள்-அவற்றில் ஒன்றை யும் செய்யவில்லை. முன்றில் முற்றம், 204. கடை - வாயில். கடல் ஆய வெள்ளம் கடலப் போன்ற தோழியர் கூட்டம். தானே - தான் ஒருத்தியே. அடைய-முற்றும். 205, திகிரிப் பகலோன்-ஆக்ஞாசக்கரமாகிய சூரியனை உடையவன்; பகலோன் - சூரியன். 3 **'. -- » · . . . ... «, * .