பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 4 I 206. அமுத நிலவெறித் தாழிஓ ரேழும் குமுதம் அலர்த்தும் குடையோன்-கமைதராக் 207. கந்தானே யும்தானும் மேருக் கதிர்கடுப்ப வந்தானே வந்து வணங்கிளுள்-நந்தா 208. தழகு வழிவெள்ளம் அங்கட் குடங்கை ஒழுக முகந்துமுகந் துண்டாள்-மழகளிற்றை 209. நிற்றி எனத்தொழுதாள் நித்தில வில்லிக்கு வெற்றி விளையும் விளைவறிந்தாள்-உற்ருெருத்தி 210. சொற்ற படியே தொடியிடும் ஆடையும் பொற்ற பொலன்கச்சும் போக்கினுள்-கொற்ற 211 முரசும் அணிகமும் முத்தக் குடையும் அரசும் உடன்நடந்த அப்பால்-பரிசனத்தார் 206. குடை சந்திரனைப் போல இருத்தலின் சந்திரனுல் விளையும் செயல்கள் விளைந்தன. குமுதம் அலர்த்தும் - குமுத மலர்களே மலரச் செய்யும்: சந்திரனுக்குக் குமுத சகாயன் என்பது ஒரு பெயர். கமை தரா - பொறுமையைப் பெருத. - 207. கந்து ஆன - தறியிற் கட்டும் யானை, யானைக்கு மேருவும், சோழனுக்குச் சூரியனும் உவமை. கதிர் - சூரியன். வந்தானே - வந்த சோழ மன்னன. 208. அழகு வெள்ளத்தை அழகிய கண்ணுகிய உள்ளங்கையில் வழிந்து ஒழுகும்படியாக முகந்து. 209. நிற்றி-நிற்பாயாக. நித்திலவில்லி-முத்தையுடைய கரும்பை வில்லாக உடைய காமன், காமன் அம்பு எய்து மங்கைக்கு மயல் மூட்டுவானதலின் அவனுக்கு வெற்றி விளையும் என்ருர். ஒருத்திமுன்பு வந்து சொன்ன தோழி. - 2 1 0, தொடியிடும் - வளைகளை இட்ட அமைப்பு. பொற்ற பொலிவு பெற்ற. ... . . 2 I j . அணிகம் - படை. அரசு - சோழன். பரிசனத்தார்ன் - சுற்றத்தார். - 5