பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 晕、 3. i 7 ஆய்மணிக் கோவை அளித்த திவள்அணிந்த காய்மணிக் கோவையும் காவாதோ-ஆய்மனையில் 218. விண்டுண்ட பாலுடன் விற்கரும்பை யும்சாறு கொண்டுண்டக் கால்மதுரம் கூராதோ - ஒண்தொடிக்காய் 219. விண்ணிற் பொழில்பெயர்த்த வீரம் குயில்பயிலும் மண்ணிற் பொழில்பெயர்க்க மாட்டாதோ அண்ணலே 220. முன்னர்ப் பெருதஉன் மோகா னலம்பொறுத்தாள் இன்னல் பொருதெமக் கென்றேத்திப்-பின்னரும் 221. சேப்பின் உகாந்த திவாகர வாதைக்குக் காப்பு:நவ நீதக் கவிகையோ-சேப்பகலா 217. ஆய் மணிக்கோவை அளித்தது- அழகிய மணிகளை அணிந்த பசுக்களைக் காப்பாற்றிய இயல்பு. காய் மணிக்கோவை சுடுகின்ற முத்து மாலையையும். காம மிகுதியால் முத்து மாலை பொரிந்துவிழும். ஆய்மனையில் - ஆயர்களின் வீட்டில். 218. விண்டு உண்ட பால் - சட்டியை உடைத்து உண்ட பால். விற்கரும்பு - காமனுடைய வில்லாகிய கரும்பு. மதுரம் கூராதோ - இனிமை மிக்கிராதோ, ஒண்டொடிக்காய். சத்தியபாமைக்காக. 219. விண்ணிற் பொழில் - பாரிஜாதச் சோலை. குயில் ஒசை காமுற்ருர்க்குத் துன்பம் தருவது. ஆதலின் அது பயிலும் சோலையைப் பெயர்க்கவேண்டும் என்று விரும்புகின்றனர். 220. முன்னர்ப் பெருத-முன்பு அனுபவித்தறியாத, மோகாணலம் மோகமாகிய் தீயை, எமக்கு இன்னல் பொருது . இவள் படும் துன்பம் எமக்குப் பொறுக்க முடியாது. 22 . து முதல் 225 வரையிலும் உள்ள சுண்ணிகள் சுற்றத்தாராகிய மகளிர் தம்முடைய பாதுகாப்பால் ஒரு பயனும் விளையாது என்பதை உருவக விகையால் புலப்படுத்தித் தம்முட் கூறிக் கொள்வன, l - சேப்பின் - செந்நிறத்தையுடைய, உகாந்த திவாகர வாதைக்கு ஊழிக் காலத்துச் சூரியனுடைய வெம்மையால் உண்டாகும் துன்பத் துக்கு, நவநீதக்கவிகை காப்போ: நவநீதம் - வெண்ணெய், சேப்பு . சிவப்பு. - -