பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 全5 மடந்தை 227. மேரு நடுப்பொற் கடவுளர் வீற்றிருக்கும் ஊரின் நடுப்பொன் உருக்கியும்-பார்உரகன் 228. பாணிக்கத் தாங்கும் பணம்ஆ யிரம்திரண்ட . மாணிக்கச் சோதியை வாரியும்-பாணித் 229 தடத்து மதித்த சலதி அமுதக் குடத்து நடுஎடுத்துக் கொண்டும்-மடுத்த 230. மதுவாய தேயை வாரி இரண்டில் பொதுவாய் நடுமுகந்து போந்தும்-மதவேள் 23 1. குழைத்தள்ளி அள்ளிக் கொடுப்பக் கமலன் இழைத்துள்ளி உள்ளிஉறுப் பெல்லாம்-கொழித்து 227. மேருவின் நடுவில் தேவர்கள் தங்கியிருக்கும் ஊரின் நடுவில் உள்ள பொன்னை உருக்கியும். தேவர்கள் வாழும் இடமாதலின் மேரு வுக்குச் சுராலயம் என்ற பெயர் உண்டாயிற்று. 227-8. பார் உரகம் பாணிக்கத் தாங்கும்- பூமியை ஆதிசேடன் நிதானங் கொள்ளும்படி தாங்குகின்ற. பணம்-முடி. ஆயிரம் படங் களில் உள்ள மாணிக்கங்களின் சோதியை. 22.8-9. பாணித்தடத்து - கையாகிய விசாலமான உறுப்பிளுல்: தடம் - இடம்; இங்கே உறுப்பு. மதித்த சலதி கடைந்த பாற்கடலிலே தோன்றிய. . 230. கள்ளாகிய கடல், தேகிைய கடல் ஆகிய இரண்டுக்கும் நடுவிடத்தில் முகத்துகொண்டு, - .231. கமலன் - பிரமன். இழைத்து -கோலம் செய்து, 22 7-33. மதவேள், பொன்னே உருக்கியும், சோதியை வாரியும், அமுதக் குடத்தின் நடுவில் உள்ளதை எடுத்துக்கொண்டும், வாரி யிரண்டில் நடு முகந்துகொண்டும். அள்ளி அள்ளிக் கொடுக்கப் பிரமன் மடந்தையின் வடிவத்தை வனைந்தான். . . . "