பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை - 3 திணைக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர்; அது பின் உள்ளோர் ஏழு பருவமாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்யும் உலாச் செய்யு ளாம் என்று எழுதியுள்ளார். தொல்காப்பியத்தில் வரும் இலக்கணம், ஒர் ஆடவன் உலா வருவதைச் சிறப்பித்துப் பாடும் வழக்கு இருந் ததைப் புலப்படுத்தும். காப்பியங்களில், காப்பியத்தலைவன் உலாவரு வதும், அப்போது மகளிர் அவனைக் கண்டு காமுறுவதுமான காட்சிகளைக் காணலாம். பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் முதலிய காப்பியங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளைக் கூறும் பகுதிகள் உள்ளன. பிற்காலத்தில், உலாப் போவதும் மகளிர் காமுறுவதுமாகிய வற்றை விரித்துப் பாடுவதற்காகவே உலா என்ற பிரபந்தம் எழுந்தது. உலாப்புறம், உலாமாலை என்று அதைக் கூறுவதும் உண்டு. கோவை, கலம்பகம், பரணி முதலிய பிரபந்தங்கள் பல பாடல்களைக் கொண் டவை. ஆற்றுப்படை, உலா முத்வியவை ஒரே நெடும்பாட்டாக அமைந்தவை. தூது, உலா, மடல் என்பவை கலிவெண்பாவால் பாடப் பெற்றவை. கடவுளைப்பற்றியும் மன்னர்களைப்பற்றியும் வள் ளல்களைப் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் புலவர்கள் பாடிய உலாக்கள் பல. உலாவில் தலைவனுட்ைய சிறப்பும், அவன் தன்ன்ை அலங்கரித்துக் கொண்டு பவனி புறப்படுவதும், மகளிர் குழாம் அவனுடைய உலாவைக் கண்டு காமுறுவதும் முதலில் சொல்லப்பெறும். பிறகு பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பருவப் பெண்களும் தலைவன்க் கண்டு காதலடை வதாகச் சொல்வ்து மரபு. தலைவன் உலாப் புறப்படும் வரையில் உள்ளவற்றை ஒரு பகுதி யாகவும், பொது வகையில் ம்களிர் குழர்ம் காமுறுவதை ஒரு பகுதி யாகவும், அப்பால் ஏழு பருவப் பெண்கள் காமுறுவதை ஒரு பகுதி யாகவும் கொள்ளலாம்: முன் இரண்டையும். ஒரு நிலையாகவும், ஏழு பருவ மகளிரோடு தொடர்புடையவற்றை ஏழு நிலையாகவும் கொள்வர் பன்னிருபாட்டியலார். - - . . . . . . . . உலாவைக் கண்டு களித்து மால் கொள்ளும் பெண்களின் பருவங் களுக்குரிய ஆண்டுக்கணக்கு வருமாறு : 5 முதல் 8 வரையில் பேதைப் பருவம்: முதல் 10 வரையில் பெதும்பைப் பருவம்: 11 முதல் 14 வரை மங்கை, 15 முதல் 18 வரை மடந்தை; 19 முதல் 24 வரை, அரிவை 25 முதல் 29 வரை தெரிவை, 30 முதல் 36 வரையில் பேரிளம் பெண். சில பாட்டியல்களில் இந்தக் கணக்கில் வேறுப்ாடு காணப்படும். . . . . . . . . . . .