பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சங்கர ராசேந்திர சோழன் உலா 36 ஆண்டு வரையில் ஆடவரைக் கண்டு காமுறும் இளமைத் தன்மை இருக்கும் போலும் அதனுல்தான் ஏழாவது பருவப் பெண் ணைப் பேரிளம் பெண் என்று கூறியிருக்கிரு.ர்கள். அதற்கு மேற்பட்ட வர்கள் இளமை நீங்கியவர்கள் போலும் ! - . -- தலைவனைக் கண்டு காமுறும் மகளிர் பரத்தையர் என்று தெரிய வருகிறது. ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப' என்ற தொல்காப்பியச் சூத்திர உரையில், ஊரிற் பொதுமகளிரோடு கூடி வந்த விளக்கம்' என்று குறிப்பதல்ை இதனை உணரலாம். அன்றியும், பெருங்கதையில் உதயணன் உலாவந்த நிகழ்ச்சியைச் சொல்லும் "நகர்வலம் கொண்டது என்ற பகுதியில், குாலம் திரியா நன்னிறைத் திண்கோள் உத்தம மகளிர் ஒழிய மற்றைக் கன்னியர் எல்லாம் காமன் துரந்த கணைஉளம் கழியக் கவினழி வெய்தி ான்று அதன் ஆசிரியர் பாடுகிறர். சீவகசிந்தாமணியில் சீவகன் உலா பந்தபோது பல பெண்கள், அன்னமும் மயிலும் போல அணிநகர் வீதி கொண்டார்களாம். அங்கே நச்சினர்க்கினியர், இது கற்புடை மகளிர் ஒழிந்தோரைக் கூறிற்று என்று எழுதியுள்ளார். ஏழு பருவ மகளிரை வருணிக்கும்போது அவரவர்களின் பருவத்துக் கேற்ற இயல்புகளையும் செயல்களையும் எடுத்துரைப்பது புலவர்களின் வழக்கம்; தத்தமக்குரிய ஆடல்களில் ஈடுபட்டதாகப் பாடுவார்கள். சிற்றில் பாவை கழங்கம் மனேயே பொற்புறும் ஊசல் பைங்கிளி யாழே பைம்புனலாட்டே பொழில்விளை யாட்டே நன்மது நுகர்தல் இன்ன பிறவும் அவரவர்க் குரிய ஆகும் என்ப" (137) என்று பன்னிருபாட்டியல் மகளிரின் ஆடல்களைச் சொல்கிறது. இவற் றில் இன்ன பருவத்தினருக்கு இன்ன விளையாடல் என்ற வரையறை இல்லை. சிற்றில் என்பதுமட்டும் பேதைக்குரியது. மற்றவை எல்லாப் பருவப் பெண்களுக்கும் உரியனவாக வரும். இந்தச் சூத்திரத்தில் காணப் பெருத வேறு வகை ஆடல்களும் சில உலாக்களில் வந்துள் ளன. பாட்டுடைத் தலைவனுடைய தசாங்கம் உலாவில் வரவேண்டும் என்று பிரபந்தத் திரட்டு என்ற இலக்கண நூல் வகுக்கின்றது.