பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை - r 5 பேதைமுதல் ஏழ்பருவப் பெண்கள் மயக்கமுற ஒதுமறு குற்ருன்ஒள் வேலோன்என்-றேதம் அறக்கலி வெண்பாவின் ஆக்கல் உலாவாம்: புறத்தசாங் கம்தாங்கிப் போற்று” என்பது அது. தலைவன் களிற்றின்மேல் உலா வருவதாகச் சொல்வதும், பிற ஊர்தியின் மேலும் தேர் மேலும் வருவதாகப் பாடுவதும் உண்டு. ஒட்டக்கூத்தர் பாடிய மூவர் உலாவிலும் இந்த உலாவிலும் களிற்றின் மேல் உலா வருவதாக இருக்கிறது, ஆதியுலா இறைவன் விடையின் மேல் உலா வந்ததாகச் சொல்கிறது. இறைவன் எழுந்தருளிய தலங் களைப்பற்றிய உலாக்களில் தேர் மேல் எழுந்தருளியதாகப் பாடி யிருக்கிரு.ர்கள் புலவர்கள். . . . . " பிற்காலத்தில் தல சம்பந்தமான பிரபந்தங்கள் மிகுதியாக எழுந் தன. பல தல மூர்த்திகளைச் சிறப்பித்துப் பல புலவர்கள் உலாப் பாடி யிருக்கின்றனர். தில்லை உலா, மதுரைச் சொக்கநாதர் உலா, ஏகாம்பர நாதர் உலா, திருவானைக்கா உலா, திருக்காளத்தி நாதர் உலா, திருவாரூர் உலா முதலியவை தல சம்பந்தமான உலாக்களாகும். அவற்றில் எல்லாம் இறைவன் திருத்தேரில் உலா வந்ததாகவே பாடி யிருப்புதைக் காணலாம். - - - ஞானசிரியரைப் பாடியதற்குத் தத்துவராயர் பாடிய ஞான விநோதன் உலா ஒர் எடுத்துக்காட்டு. மன்னர்களைப் பாடியதற்கு மூவருலாவும் இவ்வுலாவும் உதாரணங்கள். பிற வள்ளல்களைப் பாடி யதற்குச் சிவந்தெழுந்த பல்லவராய்ன் உலா உதாரணம். வரலாறு சங்கர ராசேந்திர சோழன் உலா என்பது சோழர் குலத்தில், தோன்றிய மூன்ரும் குலோத்துங்கனுடைய தம்பியாகிய சங்கரசோழ னைப் பாட்டுடைத் தலைவகைக் கொண்டு.பாடப் பெற்றது. இதன் ஆசிரியர் இன்னர் என்று தெரியவில்லை. இதைச் சங்கர் சோழன் உலா என்றும் சொல்வதுண்டு. இந்தச் சோழ அரசனை இந்தநூல், சங்கர சோழன் (காப்பு, 272) என்றும், சங்கர ராசன் (38, 115) என் றும், சங்கர வேந்தன் (114) என்றும், சங்கரன் (235, 337, 338) என்றும் கூறும். இவனுடைய தந்தை சங்கமன் என்றும், இவனுடைய தமையன்மார்கள் நல்லமன் (32), குமார மகீதரன் (37) என்றும் இவ் வுலாவில்ை புலகிைறது. மூன்ரும் குலோத்துங்கனே குமார் . மகீதரன் என்று தெரியவருகிறது. அவன் கி. பி. 1178 முதல் 1218