பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 57 288. கருதிய வாறினிக் காண்டி எனலும் பருதி மரபா பரணன்-பெருவளவன் 289, கைதவன் வானவன் கைஅம்பின் மைஅம்பை எய்தவன் சோணுட் டிறையவன்-வையம் 290, பதகர்அட வாடாப் படிமுடியக் காக்கும் மதகரட மேருமேல் வந்தான் உதகை 291 மதுரை பொருதிட்ட வார்முரச ஒதை வெதிரை அடுதோளி வேட்டாள்-பதறி 292. எழுந்தாள் நடந்தாள் திகந்தம்இரு நான்கும் தொழுந்தாள் அரசைத் தொழுதாள்-செழுந்தேன் 288 காண்டி - காண்டாய். பருதி மரபு ஆபரணன்- சூரிய குலத் துக்கு அணிகலனைப் போன்றவன். 289. கைதவன் - பாண்டியன் வானவன் - சேரன் பாண்டி நாட்டையும் சேர நாட்டையும் அடிப்படுத்தினமையின் இவ்வாறு கூறினர். கை அம்பின் மை அம்பை எய்தவன் - கையில் உள்ள ஆக்னேயாஸ்திரத்தால் கருமையையுடைய கடலை எய்தவன்; இராம கைக் கருதிச் சொன்னது. மை அம்பு : அம்பு, ஆகுபெயர். 289.90. வையம் வாடாப்படி காக்கும். பாதகர்களாகிய பகைவர் போர் செய்ய அதனுல் உலகம் வாடாதபடி அதை முழுவதும் காக்கும். மத கரட மேரு - மதம் ஊறும் சுவடுகளே உடைய மேருமலை போன்ற யானை, உதகை - குடகு நாட்டில் உள்ள ஊர் (250). 291 மதுரையைப் பொருதவன் சோழன். வெதிரை அடு தோளிமூங்கிலத் தன் அழகால் அழிக்கும் தோளே உடைய அரிவை: வெதிர்மூங்கில். வேட்டாள் - விரும்பிக் கேட்டாள். - - - 292. திகந்தம் - திசைகளின் முடிவு. எட்டுத் திசைகளிலும் உள்ளவர்கள் தொழும் திருவடியை உடைய சோழனத் தொழுதாள். 용