பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 6 சங்கர ராசேந்திர சோழன் உலா 283. படர்ந்த கமலம் படுகடல் ஏழும் * • கடந்த பெருந்தடங் கண்ணுே-கொடுங்களத் 284. தோடா அணிகத் தொருதனிச் சேவகனக் கூடா இரவும் குவியுமோ-வீடாச் 285. செழுமாலை என்பது சேண்பகர் கந்தக் கொழுமாலே நீலக் குழலோ-வழுவா 286 முறைதுற வாதான் முயங்காத போதும் - பிறைதுற வாமல் பெறுமோ-அறைகென் 287 றிருவரும் இங்ங்ன் எதிர்மலைந்த காலை வெருவரு கண் இரட்ட மீண்டும்-திருவே 283. கமலம் கண்ணுே. கடல் ஏழையும் தன் அகலத்தால் வென்ற களம் - போர்க்களம், 284 ஓடா அணிகத்து - புறங்காட்டி ஓடாத சேனையையுடைய. சேவகன் - வீரன்; இங்கே, சோழன். கமலம் இரவில் குவியும். என் கண் சோழனைச் சேராத இரவில் குவியாமல் விழித்திருக்கும் என்பது குறிப்பு. வீடா - நீங்காத. 285, செழு மாலை இருள் அடர்ந்த இரவு. சேண்பகர் கந்தக் கொழுமாலே நீலக் குழலோ நெடுந்துரத்திற் பரவும் மணத்தையுண்டய கொழுவிய மாலையை அணிந்த கருமையான கூந்தலோ. வழுவாபிறழர்.த. 286. முறை - நீதி நெறி. துறவாதான் - சோழன். முயங்காத போதும் - தழுவாத சமயத்திலும். பிறை - கூந்தலில் அணியும் அணி கலன். இரவு பிறையைக் கொண்டிருக்கும். என் கூந்தல் சோழனே முயங்காத துயரத்தால் கலைந்து பிறையைத் துறந்திருக்கும்’ என்று குறிப்பால் மறுத்தாள். அறைக் என்று. - 277-86. இக் கண்ணிகளில் விறலி அரிவையின் உறுப்புக்களைச் சில பொருள்களாக உருவகித்துச் சொல்ல, சோழன்பால் கொண்ட மயலால் அந்த உருவகம் பொருந்தாமற் போகும் என்பதை அரிவை எதிர் மறுத்துக் கேட்கும் கேள்விகள்ால் புலப்படுத்தினள். 287 எதிர் மலைந்த காலே - எதிர் எதிரே சொற்போர் தொடுத்த பொழுதில், கண் இரட்ட முரசின் பக்கம் மாறி மாறி ஒலிக்க. மீண்டும் மறுபடியும். திருவே அரிவையை விற்லி விளித்த விளி; முன்னும் திருவாழி (276) என்று வாழ்த்தினுள். ; :