பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் -SUIT 55 278, தொகுமணி வீதி.எம் கோவைத் தொழினும் மிகுமணிக் கோவை விடாதோ-மகரம் 279. அதிர்ஆர் கலிமடுத்த ஆடலான் குன்றம் முதிரா நினக்கு முலையோ-அதுவாகின் 280. வீசிய தென்றல் திரிதரினும் வேவாதாய்ப் பூசிய சாந்து பொருந்துமோ-பேசின் 281, பொலம்புரி காம்புநின் பொற்புளகத் தோளோ வலம்புரி கண்ட வனப்போ-நிலம்புரந்து 28.2. வீரம் பிரியாப் புயம்புரிந்த வேட்கையினும் ஆரம் பிரியா தடுக்குமோ-வாரி 278. எம் கோவை - சோழனே. மணிக்கோவை-மணிகள் கோத்த கோவையாகிய மேகலை. பர்ம்பால்ை மாணிக்கத்தை விடாமல் இருக்கவேண்டுமே என் இடை சோழனைக் கண்டால் மணிமேகலையை நழுவ விட்டுவிடுமே!’ என்பது குறிப்பு. மகரம் - மகர மீன். 279. ஆர்கலி மடுத்த ஆடலான் - கடலை உண்ட திருவிளையாட் டைச் செய்தவன்; அகத்தியன். பெரு முயற்சி செய்து உண்ணுமல் கையில் ஆசமன நீராக ஏந்தி உண்டமையால் விளையாட்டென்ருர். அவன் குன்றம், பொதியமலை. - 280. பூசிய சாந்து வேவாதாய்ப் பொருந்துமோ ? தென்றல் வீசினல் வெம்மை பெற்று மார்பிலே பூசிய சந்தனம் பொருக்காகி உதிர்ந்துவிடும் என்று குறிப்பித்தாள். 281. பொலம் புரி காம்பு - பொன்னைப் போன்ற மூங்கில்; நிறத்தாற் பொன் போன்றது. பொற் புளகம் - பொலிவையும் மயிர்க் கூச்சையுமுடைய வலம்புரி - சங்கின் அழகு. கண்ட வனப்போ - கழுத்தின் அழகோ. . - 282. புயம்-சோழனுடைய தோள்களை. புரிந்த வேட்கையினும்விரும்பிய காதல் உள்ள போதும். ஆரம் - முத்து மாலை. - 281-2. மூங்கிலும் வலம்புரியும் முத்துப் பிறக்கும். இடங்கள். அவற்றுக்கு முறையே தோளும் கழுத்தும் உவமை. அவ்விரண்டும் முத்தை இழக்கர்மல் இருப்பன. என் தோளும் கழுத்தும் சோழன் பாற் கொண்ட மயலால் முத்துமாலையை இழந்துவிடும் என்பது குறிப்பு. வாரி - தண்ணிரில்.