பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சங்கர ராசேந்திர சோழன் உலா 273. கம்மியர் பூட்டும் கயில்விண்டு விண்டுதன் விம்மிய மெய்வீழ வீழ்தலும்-செம்மணிய 274. கொத்தா பரணம் புகழ்ந்த குழாம்கவரப் (தாயம் புத்தா பரணப் பொறைபொறுப்பாள்-மொய்த் 275. பக்கம் எறிக்கும் பளிக்கறை வேதிகையில் ஒக்க உறைய உறைவாளைப்-புக்கொரு 276. சேய விறலி திருவாழி வாழிஎனத் துரய வளைக்கைத் துணைகூப்பி-வாயில் 2 77. செறிமணிப் பாவாய் திமிரபரம் தீர எறிமணிப் பாம்புன் இடையோ-விறலி இரவும் பகலும் (269) சேடியரும் தோழியரும் (270), என்றும் (271), என்றும் தெளிப்ப (272) என்று கூட்டுக. 273. கம்மியர்-பொற்கொல்லர். கயில்-கோக்குவாய். விண்டு - அவிழ்ந்து. விம்மிய மெய் வீழ - பூரித்த உடம்பில் வீழ. சோழன் பெருமையைக் கேட்டதல்ை உவகை மிக்கு உடம்பு பூரித்தது. அதனல் அணிகலன்கள் பூட்டு அவிழ்ந்தன. வீழ்தலும் வீழ்ந்தவுடன். 274. புகழ்ந்த குழாம்-அரிவையைப் புகழ்ந்த சேடியர் தோழியர் கூட்டம். புத்தாபரணப் பொறை-புதிய அணிகலன்களாகிய பாரத்தை. ஆயம் மொய்த்து; ஆயம் - மகளிர் கூட்டம். * 275. எறிக்கும் - ஒளி வீசும். பளிக்கு அறை வேதிகையில்-பளிங்குப் பாறையால் அமைத்த திண்ணையில். ஆயம் (274) ஒக்க உறைய. 276. சேய - செம்மை நிறத்தை உடைய திரு - திருமகளைப் போன்றவளே; அரிவையை விளித்தது. - இது முதல் 286-ஆம் கண்ணி வரையில் உள்ளவை விறலியும் அரிவையும் மாறிமாறிக் கூறும் கூற்று. - 276-7. வாயில் செறி மணிப் பாவாய் - வாயிலே செறிந்த முத் துப்போன்ற பல்லையுடைய பெண்ணே. திமிர பரம் தீர எறி மணி - இருளின் பாரம் நீங்கும்படி ஒளியை வீசும் மாணிக்கத்தை உடைய. இடையோ : இது வறலியின் வின, விறலி : விளி; அரிவை கூற்று.