பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா - 高@ அரிவை 268. காமக் கரும்பில் கனிந்த கணிஅமிர்தம் வாமச் சிகரியில் வைத்ததேன்-நேமி 269. பரவிந் திரைதோட் பருமுத்தம் கோயில் அரவிந்த வேரி அரிவை-இரவுபகல் 270. சேடியர் தோழியர் சென்னியர் பன்னியர் கோடியர் பாடற் கொளை எல்லாம்-சூடிய 271. ஆரன் அனகன் அனுபமன் ஐங்கதிக் கோரன் மனுகுலக் கோன்என்றும்-மாரித் 272. தனகர சங்கம சங்கர சோ தினகரன் என்றும் தெளிப்ப-வினவுதொறும் 258. வாமச்சிகரியில் - அழகாகிய மலையில், நேமி - திருமால். 269. பரவும் முத்தம். இந்திரை - திருமகள். கோயில் அரவிந்த வேரி - திருமகளின் கோயிலாகிய தாமரையில் உள்ள தேன். 270, சேடியர் - ஏவல் செய்யும் மகளிர். தோழியர் - பாங்கி மார், சேடியர் தோழியர்: எழுவாய். சென்னியர் - பானர். பன்னியர் - அவர் மனைவியராகிய விறலியர். கோடியர் - கூத்தர், பாடல் கொளை - பாடலின் மிகுதி, கொளை - கொள்ளை. கொளை - தாளத்தைக் கொள்ளுதல் என்று கொண்டு தாளத்தோடு கூடிய பாடல்களையெல்லாம் என்று பொருள் கொள்வதும் ஆம், 270-71 பாடல்களை ஆரமாகச் சூடியவன். அனகன் - பாவம் இல்லாதவன். அனுபமன் - உவமையில்லாதவன். ஐங்கதிக் கோரன்மல்லகதி, மயூரகதி, வானரகதி, சசகதி, சரகதி என்னும் ஐந்து கதி களையுடைய கோரம் என்னும் குதிரையை உடையவன்; கதி-ஓட்டத்தின் வகை. விக்கிதம், வற்கிதம், உபகண்டம், ஜவம், மாஜவம் என்பவற் றையும் பஞ்சகதி என்பர் (பு. வெ. 355, உரை.) 271-2. மாரித் தனகரம் - மழை போலச் செல்வத்தை. ஈயும் கரத்தையுடைய. சங்கம சங்கர சோழன் - சங்கமன் மகளுகிய சங்கர சோழன். தெளிப்ப - தெளியும்படி சொல்ல.