பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 - சங்கர ராசேந்திர சோழன் உலா 26.3. நன்றிப் புறவங்காள் நாகு மணிப்புறவம் அன்றிப் புறவம்,உமக் காகாதோ-ஒன்றுமக்குக் 264. கொள்ளை அனங்கன் குடியிருக்கும் தேர்இழுக்கக் கிள்ளைகாள் பாவம் கிடைத்ததென்று-பள்ளியினுள் 265. போயினுள் தன்துணையி னுேடும் புலந்துாட லாயினுள் எவ்வாற்றின் ஆற்றுவீர்-நீயிரும் 266. துஞ்சுவிரோ துய்ப்பனவும் துய்ப்பீரோ தூற்றுவார்க் கெஞ்சுவிரோ இத்தனிமைக் கென்செய்வீர் - வஞ்சித்துக் 367. கூருமை கூறுமின் கோதையிர் கோதையை ஏருமை பெண்மைக் கிழிவென்முள்-வேருெருத்தி 263. புறவங்காள் - புருக்களே. நாகு மணிப்புறவம் - கன்றை யுடைய பசுவின் மணி ஓசை கேட்கும் முல்லை நிலம். பசுவின் மணி யோசையினுல் காமுற்ருேர் துன்புறுவர். புறவம் - வேறு காடு. 264. கொள்ளை அனங்கன் - காமுற்ருர் அறிவைக் கொள்ளை கொள்ளும் காமன். மன்மதன் தேராகிய தென்றலே இழுக்கும் குதிரை, கிளி. தேர் இழுத்தலைப் பாவம் என்ருள். என்று - என்று கூறிவிட்டு. பள்ளியுள் - படுக்கையறைக்குள். - 265. தன் துணையிளுேடும் - தன்னுடைய தோழிமாரோடும். துணே : தொகுதி ஒருமை. புலந்து - வெறுத்து. இது முதல் 267 வரையில் மடந்தை தோழிமாரை நோக்கிக் கூறும் கூற்று. - - எவ்வாற்றின் ஆற்றுவீர் -எந்த வகையில் என் விரகதாபத்தை ஆறச் செய்வீர்கள். - - - 266 துஞ்சுவிரோ - உறங்குவீர்களோ நான் உறங்காமல் இருக்க நீங்கள் உறங்குவீர்களோ என்று ஊடிக் கேட்டாள். துய்ப்பன்வும் உண்ணும் உணவு வகைகளையும். துய்ப்பீரோ - நான் எதையும் உண் மைல் இருக்க நீங்கள் உண்ணுவீர்களோ. துாற்றுவார்க்கு எஞ்சுவிரோஎன் நிலையைக் கண்டு பழி கூறுவாரோடு சேராமல் நிற்பீர்களோ, எஞ்சுதல் சேராமல் தனித்து நிற்றல். இத்தனிமைக்கு - யான் அடைந்த இந்தத் தனிமைத் துன்பத்தைப் போக்குவதற்கு. 266-7. வஞ்சித்துக் கூருமை கூறுமின் - எனக்கு வஞ்சகத்தால் உண்மையை மறைத்துச் சொல்லாமல் உள்ளதைச் சொல்லுங்கள். கோதையை ஏருமை - சோழனுடைய மாலையைப் பெருமல் இருப்பது. பெண்மைக்கு - என்னுடைய் பெண் தன்மைக்கு. -