பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 5 : 259. கணிவிட் டெனஉமக்குக் காமன் பகழி அணிவிட் டிடவும் அடாதோ-பிணிமுகங்காள் 260. சென்று தழல்வழங்கும் தென்றல் மலையம்,உமக் கென்றும் அடைய எழுதிற்றே-அன்றில்காள் 261 வேலை அடுத்தலது வெம்பாத கப்பனஞ் (காள் சோலை அயல்உமக்குத் தோன்ருதோ-பால்அணங் 262. பாவி மலர்க்கொத்தும் முத்தும் படுமடுவின் வாவி ஒழிந்துமக்கு வாயாதோ-மேவெமது 259. கணி விட்டென - வேங்கையை அணுகாமல் விட்டிருப்பது போல; வேங்கை மலரில் வண்டு மொய்ப்பதில்லை. வண்டுகள் காமன் வில்லில் அம்புவைத்து எய்வதற்குரிய நாணுக இருப்பவை. அதை நினைந்து சொல்கிருள். பசுழி அணி - அம்பாகிய வரிசை. விட்டிடவும்விட்டு நீங்கவும். அடாதோதகாதோ. பிணிமுகங்காள்-மயில்களே. 260. தென்றல் காமுற்றவர்களுக்கு இன்னல் தருதலின் அதைத் தழல் வழங்கும் தென்றல் என்ருள். மலையம் - பொதியில் மலை. எழுதிற்றே - தலையில் எழுதியிருக்கிறதே. - 261. வேலை அடுத்தலது - கடலே அடுத்து அல்லாமல், கடல் காமுற்றுருக்குத் துன்பம் தருவது. அயல் - வேறு பணஞ்சோலை, பை மரத்தில் அன்றில் வாழும். பால் அனங்காள்- பாலைப் போல வெண் மையான அன்னங்களே, பாலை உண்ணும் அன்னங்களே என்றும் கொள்ளலாம். பாலும் நீரும் கலந்து வைத்தால் நீரை விட்டுப் பாலை அருந்துவத்ாதலின் இவ்வாறு சொன்னதாகக் கொள்க. : 262. பாவி மலர்க்கொத்தும் - பாவியாகிய மன்மதனுக்கு அம் பாக உதவும் தாமரை, நீலோற்பலம் என்னும் மலர்க் கொத்துக்களை யும். மலர்க் கொத்துக்களையே பாவியென்று சொன்னதாகவும் கொள்ள லாம்; அஃறிணையை இவ்வாறு சொல்லுதல், 'அழுக்கா றென.ஒரு பாவி', 'இன்மை யெனவொரு பாவி’ என்ற திருக்குறள் வழக்கால் அறியலாகும். படும் - உண்டாகும், மடுவின் வாவி - மடுவாகிய் வாவி, இன் வேண்டாவழிச் சாரியை, மடு - ஆழமுமாம். மலர்களும் முத்தும் காமுற்ருர்க்கு வெம்மையைத் தருவன. வாயாதோ - வேறு நீர்நிலை கிடைக்காதோ,