பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சங்கர ராசேந்திர சோழன் உலா 254. துண்னன் றிழிந்து துணைவியரும் தானும்போய்த் தண்என்ற செங்கோற் சயதரனே-அண்ணலைக் 255. கண்டாள் பணிந்தாள் கழிகாமம் உள்வழியக் கொண்டாள் மடம்நாண் கொடுத்தொழிந்தாள் ஒண்தொடியும் 256. பேரோதை மேகலையும் பெண்ணமுதை விட்டகல வீரோ தயன்வீதி விட்டகன்ருன்-காரிகையை 257. ஏந்திப் பலரும் இசைத்தேன் பசைத்தேனை மாந்திப் பயிலும் மலர்க்காவில்-போந்தளவில் 258. கான்காணி அன்றிக் கனலும் மதிப்புகவும் மான்காள் வினதுமக்கு வாய்த்ததே-தேன்காள் 254. துண்ணென்று - விரைவாக. 255. கழிகாமம் உள் வழிய - மிக்க காமம் உள்ளத்தே பொங்கி வழிய. காமம் கொண்டாள். மடத்தையும் நாணத்தையும். ஒண் தொடியும் - ஒளி விளங்கும் கைவளைகளும். 256. ஒதை - ஒசை, வீர' உதயன் - விரத்தோடு பிறந்தவன்; சோழமன்னன். காரிகையை - மடந்தையை. 257. இசையைப் பாடும் வண்டுகள் பசைத்தன்மையையுடைய தேனை உண்டு உலாவுகின்ற மலரையுடைய சோலையில், போந்தளவில்போந்த அளவில்; தொகுத்தல் விகாரம். 258. இது முதல் 264 வரையில் மடந்தையின் கூற்று. கான் காணி அன்றி - காடுகளாகிய உரிய இடம் அல்லாமல். கனலும் மதி - நிலாவில்ை தீ எழுப்பும் சந்திரன், மடந்தை நிலவினல் துன்புறுதலின் இப்படிக் கூறினுள். பின் வருவனவும் இத்தகையனவே. மதிப்புகவும்சந்திரனிலே புகுந்து வாழவும்; சந்திரனில் உள்ள மறுவை மான் என்று சொல்லுதல் வழக்கு. வினை - விதி. உரிமையாக வாழும் காடு இருக்கவும் பொல்லாத சந்திரனில் வாழும் தலைவிதி உங்களுக்கு வாய்த்ததே என்று இரங்கிள்ை. தேன்காள் - வண்டுகளே.