பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 59 298. ஆக்கிய மன்னனும்பார்த் தன்ன முலைநீலம் விக்கிய மாணிக்கம் மெய்பயந்தாள்-நோக்கால் 299 உருகி இருவரும் ஒள்.அழகின் வெள்ளம் பருகி நெகிழ்ந்த பதத்தே-முருகுயிர்க்கும் 300. ஆர்மாலே நிச்சம் அடும்ஆலே போய்ஒடுங்கக் கார்மாலை ஓதிக்குக் கைதந்தான்-கூர்மாலை 301. நீத்தாள் உவகையின் நித்தம் அகம்புறம் பூத்தாள் கலன்அகலம் பூரித்தாள்-ஏத்தி 3 O 2, முருங்கநகம் அட்ட முலேவிறலிக் கம்ம பெருங்கணக மாமாரி பெய்தாள்-கருங்கண் 298. ஆக்கிய - வளர்ச்சி பெறச் செய்த. பார்த்து - பார்க்க: எச்சத்திரிபு. அன்ன மாணிக்கம். துகிலில் நீலக்கச்சைக் கட்டிய மாணிக்கம் போன்ற அரிவை. பயந்தாள் பசலை பூத்தாள். 299. நெகிழ்ந்த பதத்தே - நெகிழ்ந்த சமயத்தில். முருகு உயிர்க் கும் - மணத்தை வீசும். • . , , - 300. ஆர்மாலே - ஆத்திமாலையை. நிச்சம் அடும் ஆலை போய் ஒடுங்க நாள்தோறும் அரிவையைத் துன்புறுத்தும் மன்மதனுடைய கரும்பு வில் செயலொழிந்து போய் ஒடுங்கும்படி; ஆலே - கரும்பு. அடும் மாலை-துன்புறுத்தும் மாலைக்காலம் எனலும் ஆம். கார்மாலே ஓதிக்கு மேகத்தின் இயல்பையுடைய கூந்தலேக் கொண்ட அரிவைக்கு அன் மொழித் தொகை. ஆர்மாலே கைதந்தான். கூர் மாலை - மிக்க காம மயக்கத்தை, மால் - மயக்கம். 301 . உவகையின் நீத்தம் - மகிழ்ச்சி வெள்ளம். கலன் அகலம் பூரித்தாள் - அணிகலனை அணிந்த மார்பு வீங்கினுள்; இது மகிழ்ச்சி யால் உண்டாகும் மெய்ப்பாடு, 3.02. முருங்க நகம் அட்ட முலை-மலையானது முறியும்படி அதனைத் தன் பருமையால் பொருது வென்ற நகிலேயுடைய, அம்ம அசை.