பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 § சங்கர ராசேந்திர சோழன் உலா 3 03. இவளும் இருசெங்கண் தானும் உளர் என்னத் - திவளும் உருவிழியிற் செய்தார்-தவனகுல 304. மன்நெஞ்சும் பின்ஏக மன்நெஞ் சகலாத (ஒருத்தி மின்நெஞ்சும் முன்அகல வேந்தகன்ருன்-பின் தெரிவை 3 05. வாரி முளரி வலாரி குடிஅடிச் சேரி எனக்கொள்ளும் தெள்ளமுதம்-மாரன் 3 06. தொழுந்தீபம் மேனகை தோற்றம் பகலிற் (யோன் செழுந்தீபம் செய்யும் தெரிவை-தொழும்தகை 302-3. இவள் கருங்கண்ணும் தான் இரு செங்கண்ணும் என்று உம்மையைப் பிரித்துக் கூட்டுக. இந்த அரிவை கருமையான கண்களை யும் சோழன் இரண்டு செம்மையான கண்களையும் உடையவர்கள் என்னும்படி, விளங்கும் பிறர் உருவை விழியிலே நிலைக்கச் செய்தார். இயல்பாகவே அரிவையின் கண்கள் கரியனவாகவும் சோழன் கண்கள் சிவந்தனவாகவும் உள்ளவை. இப்போது கரிய நிறமுடைய சோழன் வடிவைக் கண்ணிலே வைத்ததனால் அரிவையின் கண்கள் பின்னும் கருமையுடையன ஆயின. அப்படியே சிவந்த நிறமுடைய அரிவை யின் வடிவைச் சோழன் தன் கண்ணிற் கொண்டமையின் அவன் கண்கள் பின்னும் செம்மையுடையன ஆயின. தானும் - சோழனும். என்னச் செய்தார் - என்று சொல்லும்படி நிலைநிறுத்தினர். திவளும். விளங்கும். உரு - உருவத்தை. விழியில் - கண்களில் தவன குலம்சூரிய குவம், - . 304. மன் - அரசன். அவன் முன்னலே போகப் பின் நின்றுவிட் டாள் அரிவை. ஆகவே, அவன் நெஞ்சு அவளை நோக்கிப் பின் போக, அவள் நெஞ்சு அவனை நோக்கி முன் போயிற்று. மன் நெஞ்சு அகலாத மின் அரிவை. . . 305, வாரி முளரி-தண்ணீரிலே தோன்றும் தாமரை. வலாரி குடிஇந்திரன் குடியிருக்கும் தேவலோகம். அடிச்சேரி-தன் ஏவற் பெண்டுகள் வாழும் இடம். தாமரையையும் தேவலோகத்தையும் ஏவற்பெண்டுகள் வாழும் இடமாகக் கொண்டாள்; என்றது, திருமகளும் கலைமகளும் தேவருலகப் பெண்களும் இவளுக்கு ஏவல் செய்யும் பெண்களாவார்கள் என்ற கருத்துடையது. வாரி-கடல் என்று கொண்டு திருமகள் இருக்கும் இடமாகக் கொள்வதும் பொருந்தும். 306, மேனகையின் தோற்றத்தைப் பகலில் ஏற்றிய விளக்கைப் போல மங்கும்படி செய்யும் தெரிவை. தொழும் தகையோன்-சோழன்.