பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

Amildam (அமிழ்தம்) : Vide Amirdam; salt was also called 'Amildam'; Food containing the six tastes - saltish, sour, bitter, sweet, ' pungent and astringent. Aham: 207:2, 332:13,335:25, Kural: 11:2, Kurun: 14:1,83:1,206:1,286:2,
Mani: XXVIII: 116, Puram: 182:2, 392:20.

எனத் தரப்பட்டுள்ளன. எல்லாச் சொற்களும் எல்லாச் சொற்களின் எல்லா வருகைலிடங்களும் இந்தச் சொல்லடைவில் இடம்பெறவில்லை.

1983-இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சங்க இலக்கியப் பொருட்களஞ்சியப் பணி மேற்கொள்ளப்பட்டது. சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற பெயர்ச்சொற்கள் மட்டுமே இந்தப் பொருட்களஞ்சியத்தில் தரப்பெற்றுள்ளன. இதுவரையில் மூன்று தொகுதிகள் ( அ முதல் த வரையில் - தொகுதி-1, 2 - 1986, தொகுதி-3-1988 ) மட்டுமே வெளிவந்த இந்தப் பொருட்களஞ்சியத்தில்

தாழ் - 1. தாழ்ப்பாள். கூதிர்க்காலத்தில் மாளிகையிலுள்ள திண்ணிய நிலையினையுடைய தம்முன் பொருந்துதலையுடைய கதவுகள் தாழிட்டு-தாழ்ப்பாளிட்டு - கிடந்தன (நெடு, 62, 63 ). தாழோடு சேருமாறு செய்த, இரண்டாய் மாட்சிமைப் பட்டது கதவு (நெடு.81 84). தாழினையுடையது மஞ்சிகை (தொம்பை ) (பட். 163, 164)... 2 மோதிரம். தலைவி, தாழ் - மோதிரம் - செறிந்த மென்விரலை யுடையவள் (நற். 120:4 ).

என உரிய உரைவிளக்கத்துடன் சொற்கள் தொகுத்துத் தரப்பெற்றுள்ளன.

இவ்வாறு சங்கநுால் பதிப்புக்காலம் தொட்டு இன்றுவரையிலும் பல்வேறு நிலைகளில் சங்கச் சொல்லடைவுகள் வெளிவந்துள்ளன. இந்த வழித்தடத்தில் ஒரு புதிய முயற்சியாகத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ். அகத்தியலிங்கம் 1987 மார்ச்சில் சங்கஇலக்கிய அகராதித்திட்டம் ஒன்றைத் தொடங்கினார். கணிப்பொறி மையமும் அகராதியியல் துறையும் சேர்ந்து செயற்படுத்திய இந்தத் திட்டத்தில் சங்கஇலக்கியச் சொல்லடைவு ஒன்றை அகராதிக்கான தரவுமூலமாய் உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பது தொடக்க முயற்சியாய் மேற்கொள்ளப் பட்டது. இந்நிலையில் சந்திபிரிப்பிற்கு ஏற்ற எளிய பதிப்பாக மர்ரே எஸ். ராஜம் வெளியிட்ட சங்க இலக்கியப் பதிப்பு தெரிவுசெய்யப்பட்டது. இந்தப் பதிப்பின் மறுபதிப்பாய் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்ட இரண்டாம் பதிப்பு பயன்படுத்திக் கொன்னப்பட்டது. மர்ரே எஸ். ராஜம் குழுவினர் உருவாக்கிக் கொண்ட சந்திக்குறியீட்டு வினக்கத்தின்படி இந்தப் பதிப்பு சந்திபிரித்துத் தரப்பட்டிருந்தாலும் இந்தச் சந்திபிரிப்புநெறி இந்தச் சொல்லடைவிற்கான சந்தி பிரிப்பில் அப்படியே பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. சங்கச் சொற்களுக்கான சந்திபிரிப்பில் சொற்பொருண்மை அடிப்படையில் மேலும் பல

v