பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

களத்திலிருந்து சொற்களின் வருகையிடத்தரவை எங்களால் வெளிக்கொணர இயலவில்லை. 2001-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தஞ்சாவூர் வந்திருந்த திரு ப. சதாசிவம் அவர்கள் மெமோ களத்திலிருந்து தரவை வெளிக்கொணரும் பணியைச் செய்துதந்து உதவியுள்ளார்.

1987-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சொல்லடைவில் இருந்த பிழைகளை நேரடியாய்த் திருத்தமிட்டுப் பிழையில்லாச் சொல்லடைவை எப்படியும் உருவாக்கித் தீர்வது என நான் முயன்றவேளையில் பெரிதும் கைகொடுத்தவர் பேராசிரியர் எ. சுப்பராயலு அவர்கள் (சிறப்புநிலைப் பேராசிரியர், கல்வெட்டியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்). இவர் அல்ட்ரா எடிட்டர் என்ற மென்பொருளை எங்கள் துறைக் கணிப்பொறியில் நிறுவித்தந்ததுடன் சங்கச்சொல்லடைவில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும் சொல்லித்தந்தார். முழுமையாகத் திருத்தங்கள் இடப்பட்டபின்னர் வருகையிடங்களுக்கு இடையே உரிய இடைவெளிகளை அமைத்து வல இடச் சீர்மை முறையாய் அமையுமாறு சொல்லடைவுத் தரவைச் சீர்ப்படுத்தியும் கொடுத்துள்ளார். இவர்கள் மூவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

இந்தச் சொல்லடைவின் இன்றியமையாமையை உணர்ந்து உடனே பதிப்பிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு பதிப்பிக்க ஆவனசெய்த பதிப்புத்துறை இயக்குநர் (பொ.) முனைவர் ஆறு. இராமநாதன் அவர்களுக்கு என் நன்றி.

முன்னுரையைப் படித்துத் திருத்தமிட்டுதவியதுடன் சொல்லடைவின் இறுதிப் படியைக் கணிப்பொறியிலிருந்து எடுக்க உடனிருந்து உதவிய நண்பர் சா. உதயசூரியன் ( ஆய்வு உதவியாளர், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, த.ப.க. ) அவர்கள். சொல்லடைவில் இருந்த திருத்தங்களைத் தனியொருவனாய் மேற்கொண்ட வேளையில் உடனிருந்து திருத்தங்களைச் சொல்லியும் திருத்தமிடப்பட்டவற்றைக் கணிப்பொறியில் சரிபார்த்தும் உதவியவர்கள் ஆசிரியர் கல்விமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (F.D.P.) முனைவர்பட்ட ஆய்வை அகராதியியல் துறையில் மேற்கொள்ள வந்துள்ள திருமதி அ. லலிதா ( முதுநிலை விரிவுரையாளர், குந்தவைநாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர் ), திருமதி சோ. இரா. சீதாமாய் (முதுநிலை விரிவுரையாளர், அரசினர் மகளிர் கல்லூரி, கும்பகோணம்) ஆகியோரும் திருமதி முனைவர் இரா. பெ. செயலட்சுமி (மேனிலைப்பள்ளி ஆசிரியை, அரசினர் மேனிலைப்பள்ளி, கரம்பயம் ) அகராதியியல் துறையின் ஆய்வியல்நிறைஞர்பட்ட மாணவி செல்வி பா. இராஜலெட்சுமி ஆகியோரும் ஆவர். இவர்கள் அனைவருக்கும் என் நன்றி.

தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பெற்ற இந்தச் சொல்லடைவில் மேலும் சில திருத்தங்களை மேற்கொள்ளவேண்டிய சூழலில் உதவியவர் பெரியார்