பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயங்களும் தனிச் சிறப்புகளும் 113

கதையை அமைத்துக் காட்டும் சிறப்புச் சங்க இலக்கிய உவளைகளில் காணப்படுகிறது. மேலும் தற்காலத்தில் உருவகக் கதைகள் ஒரு சில எழுத்தாளர்களின் உயர் படைப் பாகச் சிறந்து விளங்குகின்றன. இவ் உருவகக் கதைகள் சங்க இலக்கியத்தில் உள்ளுறை உவமத்திலும் இறைச்சிப் பொருளி லும் அமைந்துள்ளன. அவை பின்னர்த் தனித் தலைப்புகளில் காட்டப் பெறும் ஈண்டு உவமையில் அமைந்துள்ள சிறுகதை வடிவினை மட்டும் சுட்டிக்காட்டி அவற்றின் நயச்சிறப்பு எடுத்துக்காட்டப்படுகிறது.

இவ் உவமைக் கதைகளில் வாழ்க்கைத் தத்துவமும் அரசியல் நெறிகளும் இன்பதுன்ப உணர்வுகளும் அமைந் துள்ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும். இவ் உவமைகளை நேரிடையாகப் பொருள் செய்திகளோடு தொடர்புபடுத்தாமல் விட்டால் இவையும் தனி உருவகக் கதைகளாக ஆகின்ற சிறப்பினை உடையன. இவற்றுள் ஒரு சில பின்வருமாறு:

1.6.1. சேற்றிலே தோன்றி வளர்கின்ற தாமரைச் செடி, இலைகளும் தோன்ற இடம் தருகின்றது. அதில் பூக்களும் அலர்கின்றன. தாமரை இலைகள் தோன்றியும் அவை யாருடைய நன்மதிப்பையும் பாராட்டுதலையும் பெறுவ தில்லை. அதன் மலர் தன் நிறத்தாலும் பொலிவாலும் அழகை யும் கவர்ச்சியையும் தந்து பலராலும் பாராட்டப்படுகின்றது. புலவர்கள் தாமரைப் பூவை வியந்து பாராட்டுகின்றனர். இஃது உலக இயற்கை.

சேற்றிலே பிறக்கும் தாமரை இலைகளும் பூவும் பிறப்பால் வேறுபாடு அற்று விளங்குவனவாயினும் சிறப்பால் தனித்தன்மை எய்துகின்றன. இவ் உவமைச் செய்தி ஒரு சிறந்த தத்துவத்தை உணர்த்துகிறது. உலகில் பிறப்பவர் அனைவரும் உரையும் பாட்டும் பெற்றுப் புகழால் உயர்வு அடைகின்றனர் என்று கூற இயலாது. பலர் இருந்த இடம்தெரியாமல் மறைந்து விடுகின்றனர். தாமரைப் பூவைப்போலப் புகழும் பீடும் பெற்று வாழ்வோர் ஒரு சிலரே தாமரை இலையைப் போல மறைந்து மாய்வோர் பலராவர். 'தோன்றிற் புகழோடு தோன்றுக’ என்னும் அரிய தத்துவத்தை இவ் உவமை விளக்குகின்றது.