பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 சங்க இலக்கியத்தில் உவமைகள்

எவ்வம் மிகுதர எத்திறத்து எஞ்ஞான்றும் நெய்கண்ட பாலின் பயன்யாதும் இன்றாகிக் கைதோயல் மாத்திரை யல்லது செய்தி அறியாது அளித்து என் உயிர் -கலி, 110/16-19

நெய்யைக் கடையும் தொழிலைத் தவிர அதனை நுகரும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அதனைப் போல அவள் மேனியைத் தொடும் செயலைத் தவிர அவளை நுகர வாய்ப்பே கிடைப்பதில்லை என்று கூறுகின்றான். இதுவும் முழுவதும் ஆயர் வாழ்வையே தொடர்ந்து அமைந்துள்ளது. இவ்வாறு இப்பாட்டில் அமைந்துள்ள செய்திகளும் உவமைகளும் அவர்கள் முல்லை நிலவாழ்வைச் சுற்றியே அமைந்துள்ளன.

1.5.3. முல்லை நிலத்துப் பெண் ஒருத்தி, தலைவனைக் கீழ் வருமாறு கூறி விலக்குகின்றாள். கன்றை அணுகுபவர் மீது அதனை ஈன்ற பசு சினம் கொண்டு தடுக்க நெருங்குவதைப் போலத் தாய் அவன் மீது சீறிச் சினப்பாள். அதனால் தன் தாய் வருதலைக் கருதி அவனை நீங்கிச் செல்லுமாறு கூறுகின்றாள்.

நீ நீங்கு கன்று சேர்ந்தார்கண் கதவு ஈற்றாச் சென்றாங்கு வன்கண்ணள்; ஆய்வரல் ஒம்பு.

கலி. 116/8.9

1.5.4. நெய்தற் கலியிலும் இத்தகைய திணை உவமை வந்துள்ளது. உப்பங்கழியில் மோதும் அலைகளைப் போலத் தன் நெஞ்சு தடுமாறி உழல்வதாகத் தன்நெஞ்சினை விளித்துத் தலைவன் கூறுவதாக அமைகிறது.

இருங்கழி ஒதம்போல் தடுமாறி வருந்தினை அளியை எம்மடங்கெழு நெஞ்சே

-கலி. 123/18-19

கடற்கரையில் உப்பினால் செய்யப்படும் பாவை உறைந்து நெகிழ்ந்து விடுவதுபோலத் தன் உயிர் உகுந்துவிடும் என்று தலைவன் கூறுகிறான். - உப்பியல் பாவை உறையுற்றது போல உக்குவிடும் என் உயிர் -கலி.138/16-17

1.6. கதைகளை உவமையில் அமைத்தல்

சிறுகதை இலக்கியம் இருபதாம் நூற்றாண்டின் தனி வளர்ச்சி எனக் கருதப்படுகிறது உவமைகளியேயே சிறு