பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயங்களும் தனிச் சிறப்புகளும் 111

...எம்மைத் திளைத்தற்கு எளியமாக் கண்டை அளைக்கு எளியாள் வெண்ணெய்க்கும் அன்னள் எனக் கொண்டாய்.

-கலி.110/4-6 என்பது தலைவியின் உரையாடல் ஆகும்.

அதற்கு அவன் அவளைவிடாமல் தன் நெஞ்சு அவளையே சுற்றிச் சுழல்வதாகத் தெரிவிக்கின்றான் மத்தினைக் கட்டி இழுக்கும் கயிறுபோல் அவள் நலத்தையே அவன் நெஞ்சு சுற்றிச் சுழல்வதாகக் கூறுகின்றான்.

மத்தம் பிடித்த கயிறுபோல் நின்நலம் சுற்றிச் சுழலும் எம் நெஞ்சு. -கலி. 110/10-11

மேலும் தான் அவள் மாட்டுக்கொண்டிருந்த அன்பையும் பற்றையும் வேறு ஒரு தக்க உவமை கொண்டு கூறுகின்றான். அதுவும் அவ் ஆயர் வாழ்க்கையைச் சுற்றியே அமைவதாக உள்ளது.

விடிந்தபொழுது மேய்வதற்கு இடம்விட்டுப் பெயராது தாய்ப்பசு தொழுவத்திலேயே கட்டப்பட்ட தன் கன்றினையே சுற்றிச் சூழ்ந்து நிற்பதுபோல் தன் நெஞ்சம் அவளைக் கண்டது முதல் அவளை விட்டுப் பிரிய முடியாமல் நடுங்குகின்ற துன்பத்தை அடைவதாகக் கூறுகின்றான். கன்றையே சுற்றிச் சுழலும் பசுவைப்போல அவளையே சுற்றிச் சுழல்கின்றது அவன் நெஞ்சு என்று தன் காதல் வேட்கையைப் புலப் படுத்துகின்றான்.

விடிந்த பொழுதும் இவ்வயின் போகாது

கொடுந்தொழுவிலும் பட்ட கன்றிற்குச் சூழும்

கடுஞ்சூல் ஆநாகு போல் நிற்கண்டு நாளும்

நடுங்கு ஆநாகும் போல் நிற்கண்டு நாளும்

-கலி.110/12-15

பாலைப் போல் அவள் நிலை இருப்பதாகத் தலைவன் கூறுகின்றான். அவளைத் தொடும் செயலைத் தவிர வேறு எத்தகைய பயனும் பெறாமல் தான் வருந்துவதாகக் கூறு கின்றான். நெய் எடுத்துவிட்ட பால் எவ்வகையிலும் பயன் படாதவாறு போல, அவள் தொடுவதற்குத் தவிர வேறு எவ் வகையிலும் தனக்குப் பயன்படவில்லை என்று உணர்த்து கின்றான்.