பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சங்க இலக்கியத்தில் உவமைகள்

பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப் பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமோடு குறு. 57/1-3.

இருதலைப்புள் என்ற பறவையும் அன்பின் பிணைப் பிற்கு உவமையாகி வந்துள்ளது. ஈருடலும் ஒருயிருமாக உள்ளம் ஒன்றுபட்ட காதலர்களின் உள்ள நிலையை இப்பறவை விளக்குகிறது.

இருதலைப் புள்ளின் ஒருயிரம்மே கலி.12-5 ஒருயிர்ப் புள்ளின. இருதலையுள் ஒன்று போர் எதிர்ந்து அற்றாப் புலவல் நீ கூறின்எம் ஆருயிர் நிற்குமாறு யாது. -கலி,89/4.6.

1.2. உவமையில் அகப்பொருள் புறப்பொருள் செய்திகள்.

உவமையில் இயற்கை இடம் பெற்றதைப் போல மக்கள் வாழவியலிலும் இடம் பெற்றுள்ளது. அக்காலத்து வாழ்வியல் என்பது அவர்கள் போற்றிவந்த அகவாழ்வும் புறவாழ்வும் எனலாம். அகப்பொருள் செய்திகளுக்குப் புறப்பொருள் செய்தி களும், புறப்பொருள் செய்திகளுக்குப் அகப்பொருள் செய்தி களும், உவமை ஆயின.

121. அகவாழ்வில் அலர் எழுதலுக்குப் புறச் செய்திகளாகிய போர் ஆரவாரமும், போர்ச் செய்திபரவும் விறுவிறுப்பும், நகரத் தெரக்களிர் குழுமி எழுப்பும் ஆரவாரமும் உவமிக்கப்பட்டன. அவ்வாறு கூறும்பொழுது அப்போர் நிகழ்ச்சிகள் ஊர்ப் பெயர்களோடும் அரசர்களோடும் சார்த்திக் கூறப்பட்டன. அவை வரலாற்றுச் செய்திகள் ஆயின.

1.2.1.1. செம்பியன் என்பான் அகப்பா என்னும் ஊரைத் தாக்கி நெருப்பில் இட்டு அழித்த போரில் எழுந்த ஆரவாரமும் ஒரியைக் கொன்று வெற்றி கொண்டு ஆரவாரத்தோடு காரி என்பான் பகைவரின் நாட்டில் புகுந்த பொழுது எழுந்த ஆரவாரமும்: விச்சியர் தலைவனாகிய விச்சியர்கோன் பெருநில வேந்தரோடு எதிர்த்துப் புறங்கண்ட குறும்பூர் என்னும் ஊரில்

1. நற் 14/3.6. 2. நற் 320/5.7.