பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 16t

குழலினும் இனைகுவள் பெரிது பனிஇருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல் இனிவரின் உயருமன் பரிஎனக் கலங்கிய எனதுயர் அறிந்தனை நரறியோ எம்போல இன்துணைப் பிரிந்தாரை உடையை யோநீ

-கலி.121/1619

இம் மரபு சங்க இலக்கியத்தில் போற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

1.3.3. பறை வகைகள் பல சங்க இலக்கியத்தில் உவமை யாக வந்துள்ளன. அவற்றின் நுட்ப வேறுபாட்டை உணர்ந்து பல்வேறு பொருள்களுக்கும் ஒசைகளுக்கும் உவமப்படுத்தி யுள்ளனர். இயம், கிணை, குளிர், தடாரி, தண்ணுமை, துடி, முழவு, ஆகுளி, முரசு, பறை, பனை முதலிய பல்வகைப் பறைக் கருவிகளும் அவற்றின் ஒசையும் உவமையாக வந் துள்ளன. இப் பல்வகை ஒசை வேறுபாடுகளையும் வடிவ அமைப்புகளையும் நுட்பமாக உணர்ந்து ஒப்புமைப்படுத்தி யது அவர்கள் இப்பறை இசைகளில் கொண்டிருந்த ஈடு பாட்டைக் காட்டுகிறது.'

1. இயம் : அகம் 154/23; 359/811; பத்10/29496; கத்2/68.

கினை ; அகம் 356/24; 325/711; புறம் 382/1822. தடாரி : புறம் 249/4. குளிர் : குறு 291/14. தண்ணுமை : நற்347/67, 310/912, அகம் 106/1213. துடி : அகம் 62/7; 196/23; 372/1012: புறம் 300/26; 370/6; பத் 2/210; 10/45758.

முழவு: நற்67/11; 100/912; 139:36, 176/9:378/3; குறு 301/1; 365/34; பதி 31/20, 18/19; பரி 4/1; 6:5455, 17/1314; 21/3738; 22/3637; கலி 36/4; அகம் 23/2; 61/15, 172/1112; 318/56; 328/13; 236/1; 368/17; பத் 1/215; 6/99, 6/114, 6/39697; 4/44; 10/14244; 10/511.

முரசு. நற் 197/9; 395/46; குறு 270/3, 328/23, 380/13; ஐங் 455/12; பதி 78/12; 84/13; பரி 22/4; அகம் 84/2; 175|1213; 188/13, 312/1014; பத் 8/49; அகம் 347/37.

பறை: நற் 46/57; 58/24: குறு 7/35; 193/23; பதி 70/24, அகம் 23/2; 45/12; 76/45; 151/810; 178/3; 211/2; 281/13; 188/13; 324/6; 364/24; புறம் 126/8; 229/14.

பனை: பதி33/2; புறம் 371/19; பத் 7/115.