பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை இறைச்சி 181

முன்னதில் உவமையே அமைவது இல்லை. பின்னதில் உவமை அடிப்படையாக நிற்கும். கீழ்வரும் எடுத்துக்காட்டுகள் இவ் வேறு பாட்டை உணர்த்தும்.

4.5.1. 'பல்கோட் பலவின் சாரல் அவர் நாட்டு'- நற். 102/5. இதற்குத் தரும் இறைச்சிப் பொருள் பின் வருமாறு: 'என்னைக் கைவிட்ட கொடுமையை உடையவர் சாரலாய் இருந்தும் அச்சாரலின் கண் உள்ள பலா மரங்கள் பிறர்க்குப் பயன் படுமாறு காய்க்கின்றனவே. இஃது என்ன வியப்பே எனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றியது அறிக' என விளக்கம் தரப்படுகிறது.

4.5.2. 'இலங்கும் அருவிததே இலங்கும் அருவித்தே

வானின் இலங்கும் அருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை' -கலி,41

இதற்கு நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் பின்வருமாறு: 'சூளைப் பொய்த்தான்' என்பதே கூறவேண்டும் பொருள். அதன் புறத்தே 'இங்ங்ணம் போய்த்தான் மலையகத்து நீர் திகழ்வான் என் என இறைச்சிப் பொருள் தோன்றியவாறு

3, ΠΕύ ΥΤ 35 ξΤζύΥt jΠ.

4.5.3. உவமை வழியில் அமைந்த இறைச்சிப் பொருள்கள் சில பின்வருமாறு:

4.5.3.1.'சிறுகுடிப் பரதவர்

கங்குல் மாட்டிய கனைகதிர் ஒண்சுடர் முதிரா ஞாயிற்று எதிரொளி தடுக்கும் கானலம் பெருந்துறைச் சேர்ப்பன்' நற்.219/47

இதற்குத் தரும் இறைச்சிப் பொருள் பின்வருமாறு: 'பரதவர் கங்குல் மாட்டிய விளக்கு இளங்கதிரின் ஒளி போல விளங்கும் என்றது தலைவன் என்னைக் கலந்து நின்னிற் பிரியேன் என்று சொல்லி விடுத்த வாய்மை என் நெஞ்சில் இலங்காநின்றது என்றாள் என்பதாம்.

4.5.3.2. 'பெருங்கடல்

இரவுத்தலை மண்டிலம் பெயர்ந்தென உரவுத்திரை எறிவன போல வெரூஉம் உயர்மணல் படப்பை' -நற்.375/69 இதற்குத் தரும் உரை பின்வருமாறு: "திங்களைக் கண்டு கடல் பொங்கி அலை யெழுந்து ஆரவாரிக்குமென்றது. நீ வரைவொடு வருதற்கண் எமர் எதிர்கொண்டு மகிழ்ந்து ஆரவாரிப்பரென்றதாம்.'