இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
315
அடிமரம் | : | சுற்றிலும் சப்பையான 1-2 மீட்டர் உயரமும், 1 முதல் 1·5 மீட்டர் அகலமும் உள்ள தாங்கு வேர் எனப்படும் (Buttresses). அடிமரப் பட்டைகள் காணப்படும். |
பட்டை | : | கருநீல நிறமானது (pinkish grey). வழவழப்பானது. |
அடிமரத் தண்டு | : | பழுப்பு நிறமுள்ளது. வலியது. |
இலை | : | தனியிலை. குறுகிய, நீண்ட இலைகள். 8 முதல் 10 செ.மீ. நீளம். 3 முதல் 3.5 செ. மீ. அகலம். அடியில் குறுகியும், நுனி முட்டை வடிவாகவும் உள்ளது. இலை நுனி அகன்ற கோணமுள்ளது. |
இலைக் காம்பு | : | 8 முதல் 10 மி. மீ. நீளமானது. |
இலை நரம்பு | : | நடு நரம்பு பருத்துத் தோன்றும். |
விளிம்பு | : | நேரானது. |
மஞ்சரி | : | கலப்புப் பூந்துணர், ‘ஸ்பைக்’ போன்றது. |
மலர் | : | இருபாலானது, 4 முதல் 5 அடுக்கானது மலரடிச் சிறு செதில்கள். இரண்டும் நீளமானவை. |
புல்லி வட்டம் | : | 4-5 விளிம்புகள். மலரும் போது உதிர்ந்து விடும். கரும் பச்சை நிறமானது. |
அல்லி வட்டம் | : | 4-5 அகவிதழ்கள் கருஞ்சிவப்பானவை. |
மகரந்த வட்டம் | : | இரு அடுக்கு வட்டங்களில் 8-10 மகரந்தத் தாள்கள். |
சூலக வட்டம் | : | கீழானது. ஓரறைச் சூலகம். |
சூல் | : | 2-3 தொங்கு சூல்கள். |
சூல் முடி | : | எளிதானது, சிறியது. |
கனி | : | 4 செ.மீ. நீளமும் 1.5 செ.மீ.அகலமுமுள்ள 4 பட்டையான உலர்கனி.- |