பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

காயா–பூவை
மிமிசைலான் எடுயூல் (Memecylon edule, Roxb.)

காயா என்னும் புதர்ச்செடியைக் ‘காயா’ எனக் கபிலரும் (குறிஞ். 70) ‘பூவை’ எனச் சீத்தலைச் சாத்தனாரும் (அகநா. 134), ‘பறவாப் பூவை’ எனக் கடுவன் இளவெயினனாரும் அழைப்பர்.

காயா பூத்திருக்கும் நிலையில் மயிற்கழுத்து போன்று பளபளப்பான நீலநிறமாக இருக்கும். இதன் மலரின் அகவிதழ்களுக்கடியில் செந்நிறம் காணப்படும். பெயல் பெய்து கழிந்த வைகறைப் பொழுதில் முன்னாள் பூத்த இதன் மலர்கள் உதிர்ந்து கிடக்கும். மழையின் தண்மை கண்டு வெளிப்படும் ‘தம்பலப் பூச்சி’ எனப்படும் செந்நிறமான மூதாய்ப்பூச்சி, குறுகுறுவென அங்குமிங்கும் ஓடித் திரியும். இக்காட்சி, மணிமிடை பவளம் போல அணி மிக இருந்தது என்கிறார் புலவர். அகநானூற்றில் ‘மணிமிடை பவளம்’ என்ற சொற்றொடர் ‘நித்திலக்கோவை’ப் பகுதியில் (அகநா: 304) அமைந்துள்ளவாறு நோக்குதற்குரியது.

சங்க இலக்கியப் பெயர் : காயா
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : பூவை
பிற்கால இலக்கியப் பெயர் : காயாம்பூ
உலக வழக்குப் பெயர் : காசாம்பூ
தாவரப் பெயர் : மிமிசைலான் எடுயூல்
(Memecylon edule, Roxb.)

காயா–பூவை இலக்கியம்

‘பசும்பிடி வகுளம் பல்லிணர்க்காயா’ என்றார் குறிஞ்சிக் கபிலர் (குறிஞ். 70) ‘பல்லிணர்க்காயா’ என்பதற்கு நச்சினார்க்-