பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

492

சங்க இலக்கியத்

இதன் மலர்களை மாலையாக்கிக் காளியம்மனுக்குச் குட்டுவர். இதன் மலர் புனல் வடிவானது. பசிய புல்லியிதழ்கள் 5 உண்டு. அல்லியிதழ்கள் ஐந்தும் மஞ்சள் நிறமானவை. அடியில் இணைந்து, குழல் வடிவாக இருக்கும். மடல் மேலே விரிந்து, இணைந்து புனல் வடிவாயிருக்கும். அதற்கும் மேலே 5 இதழ்களும் பிரிந்து விரிந்திருக்கும்.

இதனுடைய அல்லியிதழ்களின் நிறத்திற்கேற்ப வெள்ளை, சிவப்பு நிற அரளியும் உண்டு. இதன் காய் பழுப்பதில்லை. பசுமையாகவும், அமுங்கிய உருண்டை வடிவாகவும், ஐந்து சிறகு போன்ற அமைப்புடனும் காணப்படும். ஒரு காயில் ஒரு விதையே பெரும்பாலும் உண்டாகும். இவ்விதையில் கொடிய நச்சுப் பொருள் இருக்கிறது. இதன் விதைகளையும், வேரையும் அரைத்துக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டவர் பலர்.

அரளியில் அல்லமாண்டா கத்தார்டிகா (Allamanda cathertica) என்ற புதர்க் கொடி ஒன்றுண்டு. இது தென் அமெரிக்காவைச் சேர்ந்தது. இதிலும் மஞ்சள் மலர்கள் உண்டாகின்றன. இலைகள் மூன்றடுக்காக இருக்கும். இது திருவாங்கூரில் உப்பங்கழிப்புறத்தில் காணப்படுகிறதென்பர்.

அரளி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : அப்போசைனேசி
தாவரப் பேரினப் பெயர் : அல்லமாண்டா (Allemanda)
தாவரச் சிற்றினப் பெயர் : நெர்ரிபோலியா (nerifolia)
உலக வழக்குப் பெயர் : அரளி
தாவர இயல்பு : சிறு மரம்: 3-4 மீட்டர் உயரமாகவும் கிளைத்து வளரும். பசிய நீண்ட தனியிலை. மாற்று அடுக்கில் இலைக் காம்பு மிகச் சிறியது. கணுவில் மூவிலைகள் சுற்றடுக்காக இருப்பதுண்டு