பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

சங்க இலக்கியத்

இதனையுட்கொண்டு போலும் இந்நிலத்தை நெய்தல் என்றனர். இக்கருத்து செந்தமிழில் நிலவியுள்ளது. பண்டைத் தமிழ்ப்புலவர்கள் இந்நெய்தற் கொடி, இதன் பெயரால் அமைந்த நிலம், ஒழுக்கம், பறை முதலியவற்றைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

சங்க இலக்கியத்துள் நெய்தலைப் பற்றிய பாடல்கள் பல உள. அகநானூற்றில் பத்துப் பத்தான எண்களைக் கொண்ட 40 பாடல்களும், கலித்தொகையில் 33 பாடல்களும், நெய்தற் கலிப் பாக்களும், ஐங்குறு நூற்றில் நெய்தல் பற்றிய 100 பாக்களும் திணை மாலை நூற்றைம்பதில் 31 பாக்களும் உள்ளன. இவையன்றிக் குறுந்தொகை, நற்றிணை, திணைமொழி ஐம்பது முதலியவற்றிலும் நெய்தல் திணையைப் பற்றிய பாக்கள் மலிந்துள்ளன.

அன்றி நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்னும் பேரெண்களைப் பரிபாடல் (2:12-15) கூறும். இவற்றை விளக்குதல் வேண்டப்படுகின்றது. நூறு நூறாயிரம் என்பது ஒரு கோடி ஆகும். கோடி எண் மடங்கு கொண்டது-அதாவது கோடி கோடி சங்கமென்று கூறும் பிங்கலம். சங்கம் எண் மடங்கு கொண்டது விந்தம்.

கோடி எண் மடங்கு கொண்டது = சங்கம்
சங்கம் எண் மடங்கு கொண்டது = விந்தம்
விந்தம் எண் மடங்கு கொண்டது = ஆம்பல்
ஆம்பல் எண் மடங்கு கொண்டது = கமலம்
கமலம் எண் மடங்கு கொண்டது = குவளை
குவளை எண் மடங்கு கொண்டது = நெய்தல் = 101835008
நெய்தல் எண் மடங்கு கொண்டது = வெள்ளம்

உலகம் தோன்றி மறையுங் காலத்தை ஊழி என்பர். எனவே, ஊழி என்பது பன்னெடுங்காலமாகும். இவற்றைக் கீரந்தையார் கூறுவர்:

“....  ....  ....  .... அவற்றிற்கும்
 உள்ளீடாகிய இருநிலத்து ஊழியும்
 நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
 மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
 செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை”

-பரி. 2 : 12-15