பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கமுகு
அரீகா காட்சூ (Areca catechu,Linn.)

கமுகில் பாளை உண்டாவதிலிருந்து, இளம் பாக்குப் பிஞ்சில் உண்டாகும் சுவையான நீர் வரையில் மதுரைத் தத்தங்கண்ணனார் அகநானூற்றில் மிக அழகாகத் தொகுத்துப் பாடியுள்ளார்.

சங்க இலக்கியப் பெயர் : கமுகு
தாவரப் பெயர் : அரீகா காட்சூ
(Areca catechu,Linn.)

கமுகு இலக்கியம்

கடியலூர் உருத்திரங்கண்ணனார், ‘கமுகு’ மரம் பரிய தாளினை உடையது எனவும், பாளையாகிய அழகினை உடைய பசிய பூ விரியாமல் கருவாய் (பாளைக்குள் மூடப் பெற்று) இருக்குமெனவும் கூறுகின்றார்.

“பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக்
 கரு இருந்தன்ன”
-பெரும்பா. 7-8

இக்கமுகு நெடிது ஓங்கி வளரினும் ‘புல்’ எனப்படும்.

இதனுடைய மலர் வரலாறு கூறுவார் போல மிக அகழாக மதுரைத் தத்தங்கண்ணனார் பாடியுள்ளார்.

கமுகின் பாளை, மலர்கள் தொடுத்த தொடையல் போன்றது: இணர்க்கிளை பல மலர்களைக் கொண்டது; பாளை முதிர்ந்த போது மலர்க் கொத்து பிடிப்பு விட்டு விழும்; பூங்குலை வாள் வடித்தது போல இருக்கும்; இத்தோற்றம் மிக அழகானது: அலர்ந்த பல பூக்கள் மாலை போலத் தோன்றும்; நரம்புகளோடு