பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

710

சங்க இலக்கியத்

கனி : இளம் பனங்காயின் விதைகளில் உண்டாகும் நுங்கு, உண்பதற்கினிதாக இருக்கும். விதைகள் முளைத்தற்குச் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருளை இதன் இளங்காயில் நுங்காக நுகர்கிறோம்.

பனையின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 36 என வெங்கடசுப்பன் (1945) பி. போஷ் (1947), சர்மா, ஏ. கே. சர்க்கார் (1956 பி, ) (1957) சர்க்கார் எஸ். கே. (1957) என்பவர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இயல்பாகவே பெரிய பனந்தோப்புகளில், ஆண் பனை மரங்கள் மிகுதியாகவும், பெண் பனை மரங்கள் குறைவாகவும் காணப்படுகின்றன. பெண் பனை மரத்தில்தான் ‘பதநீர்’ இறக்கப்படுகிறது; காய்களும் பயன்படுகின்றன. இவை காய்க்கத் தொடங்கும் போதுதான், இவை ஆண் மரமா, அன்றிப் பெண் மரமா என்று அறியலாம். இவை பூப்பதற்கு ஏறத்தாழ 10-12 ஆண்டுகள் ஆகின்றன. ஆண் பனை மரங்கள் கட்டிட வேலைக்கு உதவும். எனினும் பெண் பனையே மிகுதியும் பயன் தர வல்லது. ஆண் பனையைப் பெண் பனையாக்கிய அடிகளார் திருஞானசம்பந்தர் என்ப. குடந்தை அருணாசலப் புலவர் பனையின் 801 வகையான பயன்களைப் புலப்படுத்தி, தாலாவிலாசம் என்றொரு நூல் எழுதி உள்ளார். பெண் பனை மரங்கள் கருவுறுவதற்கு நூற்றுக்கு மேலுள்ள பனந்தோப்பில் ஓர் ஆண் மரம் இருந்தால் போதுமானது. இதனைக் கன்றிலேயே அறிய இயலாமையால், ஆண் மரங்களே மிகுந்து விடுகின்றன.

பனைமரம் ஆணா, பெண்ணா என்று அறிவியில் முறைகளால் ஆய்ந்து கூற முடியுமா என்று சில ஆண்டுகட்கு முன்னர் யாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சில ஆய்வுகளை மேற் கொண்டோம். பனை மட்டைகளில் (இலைக் காம்பு) வலிய நார்த்திசு மிகுந்திருக்குமென முன்னர்க் கூறினோம். ஆண் பனை மட்டைகளையும், பெண் பனை மட்டைகளையும் தனித் தனியாக வெவ்வேறு நாள்களில் கொண்டு சேர்த்து, அவற்றின் நார்த்திசுக்களைத் தனித்தெடுத்துக் கொண்டோம். அவற்றைத் தனித் தனியாகப் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறையில் உள்ள எக்ஸ்ரே கருவியில் இடையில் வைத்து நிழற்படம் எடுத்தோம். ஆண்பனை மர நாரில் இரண்டு வட்டமான கற்றைகளும் (bands), பெண்பனை நாரில் மூன்று கற்றைகளும் இருப்பதைக்