பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

765

தினை அரிசிக்காகத் தினை பயிரிடப்படுகின்றது. நல்ல உணவுப் பொருள். ஆங்கிலத்தில் இதற்கு எப்படியோ இட்டாலியன் மில்லெட் (Italian millet) என்று பெயரிடப்பட்டுள்ளது. சங்கத் தமிழில் தினை விளைவது பலவாறாகக் கூறப்படுகின்றது. தமிழ் நாட்டில் மிகப் பழங்காலந் தொட்டு விளைந்து வருகின்றது.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 18 என்று மோரி நாகா முதலியோர் (1929) கிருஷ்ணசாமி அய்யங்கார் (1935 பி) சர்மா, ஏ. கே. (1956) சிங், டி. என். காட்வார்ட் (1960) போடென்; சென் (1962) போல் (1962) வீல்வீபெர் கிஷிமோட்டோ (1962) என்போர் கணித்துள்ளனர்.