பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

764

சங்க இலக்கியத்

ஏனல்—தினை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : செட்டேரியா (Setaria)
தாவரச் சிற்றினப் பெயர் : இட்டாலிகா (italica)
சங்க இலக்கியப் பெயர் : ஏனல்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : தினை
உலக வழக்குப் பெயர் : தினை, தெனை
ஆங்கிலப் பெயர் : இட்டாலியன் மில்லெட் (Italian millet)
தாவர இயல்பு : ஓராண்டுச் செடி. 5 அடி உயரம் வரை வளரும். இதன் தண்டு “கல்ம்” எனப்படும்.
இலை : குறுகிய, தட்டையான, சற்று நீண்ட இலை 6-18 அங். நீளமும் 0.4-1.4 அங் . அகலமும் உள்ளது.
மஞ்சரி : கதிர் தனித்து செடியின் நுனியில் உண்டாகும். 12 அங். வரை நீளமானது. ‘ஸ்பைக்லெட்’ என்ற கதிரில் நீளமான நுண்ணிய முட்கள் இருக்கும்.
மலர் : மேற்புற ‘லெம்னா’ வழவழப்பானது. அடிப்புற ‘லெம்னா’வில் நீண்ட நுனியில் கூர்மையான ‘பாலியா’ இருக்கும். மலர் உண்டாகும். இதில் 2 ‘லாடிக்கியூல்’ இருக்கும். 3 தாதிழைகள் 2 சூல் தண்டுகள்.
கனி : செம்மஞ்சள் நிறமானது. தினை அரிசியை ‘லெம்னா’ ‘பாலியா’ என்ற உமி மூடிக் கொண்டிருக்கும்.